Advertisment

எஃப்.டி வட்டி விகிதங்களை திருத்திய இண்டஸ்இந்த் வங்கி: புதிய வட்டி விகிதங்கள் இதோ

7 முதல் 30 நாள்களில் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கு வங்கி 3.50% வட்டி விகிதத்தை வழங்குகிறது. மேலும் இண்டஸ்இந்த் வங்கி 31 முதல் 45 நாள்களில் முதிர்ச்சியடையும் எஃப்.டி.க்களுக்கு 3.75% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

author-image
WebDesk
New Update
How to claim unclaimed money from bank SA and FDs

இந்தப் புதிய வட்டி விகிதங்கள் டிசம்பர் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.

fixed-deposits  | தனியார் வங்கியான இந்தஸ்இந்த் (IndusInd) வங்கி, ரூ.2 கோடிக்கும் குறைவான நிலையான வைப்புகளுக்கான (FD) வட்டி விகிதங்களைத் திருத்தியுள்ளது.

இந்தத் திருத்தத்தைத் தொடர்ந்து, வங்கி தற்போது 1 முதல் 2 ஆண்டுகள் வரை அதிகபட்ச வருமானம் 7.50% என்று உறுதியளிக்கிறது. இந்தப் புதிய வட்டி விகிதங்கள் டிசம்பர் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.

Advertisment

வட்டி விகிதங்கள்

7 முதல் 30 நாள்களில் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கு வங்கி 3.50% வட்டி விகிதத்தை வழங்குகிறது. மேலும் இண்டஸ்இந்த் வங்கி 31 முதல் 45 நாள்களில் முதிர்ச்சியடையும் எஃப்.டி.க்களுக்கு 3.75% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

46 முதல் 60 நாள்களுக்குள் செய்யப்படும் டெபாசிட்டுகளுக்கு, வங்கி 4.25% வட்டி விகிதத்தை செலுத்துகிறது. 61 முதல் 90 நாள்களுக்குள் செய்யப்படும் டெர்ம் டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதம் 4.60% ஆகும்.

91 முதல் 120 நாள்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் இப்போது 4.75% ஆக உள்ளது. அதேநேரத்தில், 121 முதல் 180 நாள்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் இப்போது 5% ஆக உள்ளது.

மேலும், 181-210 நாள்களில் முதிர்ச்சியடையும் உள்நாட்டு டெபாசிட்டுகளுக்கு 5.85% வட்டியை வங்கி செலுத்துகிறது. தொடர்ந்து, இண்டஸ்இந்த் (IndusInd) வங்கி 211-269 நாள்களில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 6.10% வட்டி அளிக்கிறது.

270 முதல் 364 நாள்களுக்குள் செய்யப்படும் டெபாசிட்டுகளுக்கு, வங்கி 6.35% வட்டி விகிதத்தையும்,  ஒன்று முதல் இரண்டு ஆண்டுகளுக்கு இடைப்பட்ட கால வைப்புகளுக்கு, 7.50% வட்டியையும் வழங்குகிறது.

இரண்டு வருடங்கள் மற்றும் அறுபத்தாறு மாதங்கள் வரை முதிர்ச்சியடையும் IndusInd வங்கியின் நிலையான வைப்புத் தேர்வுகள் இப்போது 7.25% வட்டி விகிதத்தை அளிக்கும், அறுபத்தாறு மாதங்களுக்குப் பிறகு முதிர்ச்சியடைபவை 7% வட்டி விகிதத்தை அளிக்கும். ஐந்தாண்டு கால சிந்து வரி சேமிப்பு திட்டத்தில் பொது மக்கள் பெறும் வட்டி விகிதம் 7.25% ஆகும்.

60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும், ரூ. 2 கோடிக்குக் கீழான டெர்ம் டெபாசிட்களுக்கும் (அழைக்கக்கூடியது) கூடுதல் 0.75% வட்டி விகிதம் கிடைக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Fixed Deposits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment