பணவீக்கம் அதிகரிப்பு: வரைவு அறிக்கை தயாரிக்கும் ஆர்பிஐ
தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஜனவரி-மார்ச் 2022 மற்றும் ஏப்ரல்-ஜூன் 2022 இல் சராசரி சில்லறை பணவீக்கம் முறையே 6.34 சதவீதம் மற்றும் 7.28 சதவீதமாக இருந்தது.
தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஜனவரி-மார்ச் 2022 மற்றும் ஏப்ரல்-ஜூன் 2022 இல் சராசரி சில்லறை பணவீக்கம் முறையே 6.34 சதவீதம் மற்றும் 7.28 சதவீதமாக இருந்தது.
அக்டோபர் 12 ஆம் தேதிக்குள் மூன்று காலாண்டுகளுக்கான சில்லறை பணவீக்கம் பற்றி RBI க்கு முழுமையாகத் தெரிவிக்கும்.
இந்திய ரிசர்வ் வங்கி அக்டோபர் 12ஆம் தேதிக்கு பிறகு நிதிக் கொள்கை கூட்டத்தை கூட்டுகிறது. அப்போது சராசரி சில்லறை பணவீக்கம் அதிகப்பட்சமாக இருப்பதற்கான காரணங்களை விளக்கி மத்திய அரசுக்கு அறிக்கை சமர்பிக்க இருக்கிறது. பொதுவாக ரிசர்வ் வங்கி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பணவீக்க இலக்கை நிர்ணயிக்கும். முன்னதாக ஆகஸ்ட் 5ஆம் தேதி 2016 முதல் மார்ச் 31 2021ஆம் அண்டுவரை இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து அடுத்த 5 ஆண்டுக்கான இலக்கு மார்ச் 26,2026ஆக உள்ளது. ஆனால் தற்போது பணவீக்கம் மிக அதிகமாக உள்ளது. இதனால் ஏழை- எளிய மக்கள் பெரிதளவு பாதிக்கப்படுகின்றனர். தொடர்ந்து, ரிசர்வ் வங்கி மூலம் பணவீக்க இலக்குகளை செயல்படுத்துவதற்கு சட்டப்பூர்வ அடிப்படையை வழங்க மத்திய அரசு முடிவு செய்தது.
Advertisment
RBI மூலம் பணவீக்க இலக்குகளை செயல்படுத்துவதற்கு ஒரு சட்டபூர்வமான அடிப்படையை வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. பிப்ரவரி 20, 2015 அன்று அப்போதைய RBI கவர்னர் ரகுராம் ராஜன் மற்றும் அப்போதைய நிதிச் செயலாளர் ராஜீவ் மெஹ்ரிஷி (ஜனாதிபதி சார்பாக) இடையே பணவியல் கொள்கை கட்டமைப்பு கையெழுத்தானது. RBI சட்டம், 1934, மே 2016 இல் திருத்தப்பட்டது. இந்த கட்டமைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துகிறது.
பணவீக்கம்
தொடர்ந்து மூன்று காலாண்டுகளுக்கு பணவீக்க இலக்குகளை மீறினால், மத்திய அரசிடம் ரிசர்வ் வங்கி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கட்டமைப்பு ஒப்பந்தம் கோருகிறது. எட்டு ஆண்டுகளில், ரிசர்வ் வங்கி சில்லறை பணவீக்கத்தை மூன்று காலாண்டுகளுக்கு மேல் வரம்பான 6 சதவீதத்திற்கு அப்பால் சரிய வைப்பது இதுவே முதல் முறை.
Advertisment
Advertisements
தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஜனவரி-மார்ச் 2022 மற்றும் ஏப்ரல்-ஜூன் 2022 இல் சராசரி சில்லறை பணவீக்கம் முறையே 6.34 சதவீதம் மற்றும் 7.28 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு ஜூலையில் இது 6.71 சதவீதமாக இருந்தது. ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்திற்கான தரவு முறையே செப்டம்பர் 12 மற்றும் அக்டோபர் 12 ஆகிய தேதிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
அக்டோபர் 12 ஆம் தேதிக்குள் மூன்று காலாண்டுகளுக்கான சில்லறை பணவீக்கம் பற்றி RBI க்கு முழுமையாகத் தெரிவிக்கப்படும். அதே வேளையில், நுகர்வோர் விலை குறியீட்டு எண் (CPI) அடிப்படையிலான பணவீக்கம் ஜூலை-செப்டம்பர் காலாண்டிலும் 6 சதவீத உச்ச வரம்பை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகஸ்ட் 5, 2022, பணவியல் கொள்கை அறிக்கையில், ஜூலை-செப்டம்பருக்கு RBI இன் சில்லறை பணவீக்கக் கண்ணோட்டம் 7.1 சதவீதமாக இருந்தது. அடுத்த இரண்டு காலாண்டுகளில், இது முறையே 6.4 சதவீதம் (அக்டோபர்-டிசம்பர் 2022) மற்றும் 5.8 சதவீதம் (ஜனவரி-மார்ச் 2023) ஆகும்.
பணவீக்க இலக்கை அடையத் தவறினால், ரிசர்வ் வங்கி, இலக்கை அடையத் தவறியதற்கான காரணங்களைத் தெரிவிக்க வேண்டும், அதை 4 சதவீதமாகக் குறைப்பதற்கான பரிகார நடவடிக்கைகளை முன்மொழிய வேண்டும், மேலும் அதற்கான காலகட்டத்தின் மதிப்பீட்டையும் அளிக்க வேண்டும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில் மத்திய நிதி அமைச்சகத்திடம் விரைவில் அறிக்கை சமர்பிக்கப்பட உள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil