/tamil-ie/media/media_files/uploads/2021/07/ipo.jpg)
புதிய வெளியீட்டின் மூலம் கிடைக்கும் வருமானம் ரூ.144.40 கோடி கடனைச் செலுத்த பயன்படுத்தப்பட உள்ளது.
ஒருங்கிணைந்த மருந்து நிறுவனமான இன்னோவா கேப்டாப் (Innova Captab) ஆரம்ப பொதுச் சலுகையானது வெள்ளிக்கிழமை சலுகையின் இரண்டாவது நாளில் 3.53 முறை சந்தா பெற்றுள்ளது.
தேசிய பங்குச் சந்தை தகவலின்படி 90,78,010 பங்குகளுக்கு எதிராக 3,20,55,177 பங்குகளுக்கு 570 கோடி ரூபாய் முதல் பங்கு விற்பனை ஏலம் பெற்றுள்ளது.
சில்லறை தனிப்பட்ட முதலீட்டாளர்களுக்கான (RIIகள்) வகை 5 மடங்கு சந்தாவைப் பெற்றுள்ளது, அதே நேரத்தில் நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்கான ஒதுக்கீடு 3.26 மடங்கு சந்தா ஆகும்.
தகுதிவாய்ந்த நிறுவன வாங்குபவர்களுக்கான (QIBs) பகுதி 1.08 மடங்காக உள்ளது. மேலும், ஆரம்ப பொதுச் சலுகை (IPO) ரூ. 320 கோடி ஆகவும், ஈக்விட்டி பங்குகள் விற்பனை 55,80,357 ஆகவும் உள்ளது.
புதிய வெளியீட்டின் மூலம் கிடைக்கும் வருமானம் ரூ.144.40 கோடி கடனைச் செலுத்தவும், ரூ.23.60 கோடி துணை நிறுவனத்தில் முதலீடு செய்யவும், யூஎம்எல், ரூ.72 கோடி செயல்பாட்டு மூலதனத் தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்பட உள்ளது.
Innova Captab ஒரு ஒருங்கிணைந்த மருந்து நிறுவனமாகும், இதில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி, மருந்து விநியோகம், சந்தைப்படுத்தல் மற்றும் ஏற்றுமதிகள் உள்ளிட்ட பணிகள் செய்யப்படுகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.