சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு உடனடி OD : ஐசிஐசிஐ வங்கி புதிய முயற்சி

வங்கியில் வாங்கும் ஓடிக்கு, குறித்த காலத்துக்கு முன்னதாகவே, கடனைத் திருப்பிச் செலுத்தினால் பெறப்படும் கட்டணம் போன்றவையும் இல்லை.

ஆர்.சந்திரன்

நாட்டின் தனியார் துறை வங்கிகளில் முதன்மையான ஐசிஐசிஐ வங்கி, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு தேவைப்படும் நடைமுறை செலவுகளுக்கான உடனடி கடன் வசதியை அளிக்க முன் வருகிறது. இதற்காக, தற்போது வேகம் பெற்று வரும் டிஜிட்டல் தொழில் நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, இவ்வங்கியின் வலைதளம், மொபைல் அப்ளிகேஷன் போன்றவற்றின் மூலமே இந்த கடனைப் பெற புதிய வாயில்களைத் திறந்துள்ளது. இந்த கடன் திட்டத்தை Insta OD என குறிப்பிடுகிறார்கள்.

இதன்படி, இவ் வங்கியின் வாடிக்கையாளர் நிறுவனமான ஒன்று, தற்போது கூடுதலாகக் கடன்பெற, காகிதங்கள் எதுவுமின்றி, 15 லட்சம் வரை கடன் பெற முடியும். இதற்கு பிணை எதையும் வழங்க வேண்டியதில்லை. குறித்த காலத்துக்கு முன்னதாகவே, கடனைத் திருப்பிச் செலுத்தினால் பெறப்படும் கட்டணம் போன்றவையும் இல்லை. இணையதளம் அல்லது I-Bizz என்ற மொபைல் அப்ளிகேஷனில் உள்ள வாய்ப்பை இதற்கு பயன்படுத்தலாம் என இவ்வங்கி சார்பில் கூறப்பட்டுள்ளது.

×Close
×Close