Advertisment

”ஜன்தன்” வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இத்தனை சலுகைகளா?

Insurance and other benefits of jan dan yojana in tamil: ஜன் தன் திட்டத்தில் ரூ. 1.30 லட்சம் வரை விபத்து காப்பீடு வசதி, விவரங்கள் இதோ...

author-image
WebDesk
New Update
”ஜன்தன்” வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இத்தனை சலுகைகளா?

எல்லோருக்கும் வங்கி கணக்கு என்ற நோக்கத்தில் மத்திய அரசால் ஆரம்பிக்கப்பட்ட முக்கியமான திட்டம் பிரதான் மந்திரி ஜன தன் யோஜனா (பி.எம்.ஜே.டி.ஒய்). இந்த ஜன தன் யோஜனா மோடி அரசின் முதல் பதவிக் காலத்தில் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், நாட்டின் அனைத்து குடிமகன்களுக்கும் வங்கியில் ஜன தன் கணக்கைத் திறக்கும் வசதி வழங்கப்படுகிறது.

Advertisment

இந்த திட்டத்தின் கீழ் பல வகையான நிதி சலுகைகள் கிடைக்கின்றன. பல ஜன் தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நெருக்கடி காலங்களில் அரசாங்கத்திடமிருந்து நிதி உதவிகளையும் பெற முடியும் என்பது தெரியவில்லை. இந்த திட்டத்தில் உள்ள நன்மைகள் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்.

பூஜ்ஜிய இருப்பு கணக்கு

இந்த திட்டத்தில் பூஜ்ஜிய இருப்பில் கணக்கைத் திறக்கலாம். ஏனெனில் மற்ற வங்கி கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிப்பது அவசியம். பிரதமர் மோடியே ஜன தன் திட்டத்தை பலமுறை பாராட்டியுள்ளார், மேலும் அதன் நன்மைகளையும் எடுத்துரைத்துள்ளார். இத்திட்டம் வங்கி சேமிப்பு மற்றும் வைப்புக் கணக்குகள், கடன்கள், காப்பீடு, சாமானியர்களின் ஓய்வூதியம் ஆகியவற்றை அணுகுவதை உறுதி செய்கிறது. பூஜ்ஜிய இருப்பு வசதி கொண்ட இந்த சிறப்புக் கணக்கை உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள எந்த வங்கி கிளையிலும் திறக்க முடியும்.

ரூ .1.30 லட்சம் காப்பீடு

பிரதான் மந்திரி ஜன தன் யோஜனா கணக்கு வைத்திருப்பவர் மொத்தம் ரூ .1.30 லட்சம் வரை காப்பீடு பெறுகிறார். இது தவிர, விபத்து காப்பீடும் இதில் கிடைக்கிறது. கணக்கு வைத்திருப்பவருக்கு விபத்து ஏற்பட்டால் விபத்து காப்பீட்டுக்கான ரூ .1,00,000 மற்றும் பொது காப்பீடான ரூ .30,000 வழங்கப்படுகிறது. கணக்கு வைத்திருப்பவர் விபத்தில் இறந்தாலும், அவரது குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கும்.

ஜன் தன் கணக்கை தொடங்குவது எப்படி?

நீங்கள் ஜன தன் கணக்கைத் திறக்க விரும்பினால், நீங்கள் உங்கள் அருகிலுள்ள வங்கிக்குச் சென்று பெயர், மொபைல் எண், வங்கி கிளையின் பெயர், விண்ணப்பதாரரின் முகவரி, தொழில் அல்லது வேலைவாய்ப்பு மற்றும் ஆண்டு வருமானம் போன்ற விரிவான தகவல்களுடன் படிவத்தை நிரப்ப வேண்டும்.

மேலும், சார்ந்து இருப்பவர்களின் எண்ணிக்கை, எஸ்எஸ்ஏ குறியீடு அல்லது வார்டு எண், கிராமக் குறியீடு அல்லது டவுன் குறியீடு போன்றவற்றையும் நிரப்ப வேண்டும்.

இந்தியாவில் வசிக்கும் 10 வயதிற்கு மேற்பட்ட எந்தவொரு குடிமகனும், ஜன தன் கணக்கைத் திறக்கலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bank Account Insurance
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment