இன்றைய காலகட்டத்தில் பெரிய பட்ஜெட்டில் வீடு கட்ட ஹோம் லோன் எனப்படும் வீட்டுக் கடன்கள் பெரிய உதவியாக இருக்கின்றன.
தற்போது நாம் பல்வேறு வங்கிகளின் ஹோம் லோன் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பார்க்கலாம்.
ரூ.50 லட்சத்துக்கும் மேல் ஹோம் லோன் வழங்கும் வங்கிகள்- வட்டி விகிதங்கள் இங்கே
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
கிரெடிட் ஸ்கோரின் அடிப்படையில் எஸ்பிஐ வட்டி விகிதத்தை வசூலிக்கிறது. கிரெடிட் ஸ்கோரில் நல்ல மதிப்பெண் பெற்ற கடனாளிகளுக்கு வட்டி விகிதம் 9.15 சதவீதம் முதல் 9.55 சதவீதம் வரை காணப்படும்.
ஹெச்டிஎஃப்சி வங்கி
ஹெச்டிஎஃப்சி வங்கி 8.9 சதவீதம் முதல் 9.6 சதவீதம் வரை மாறுபடும் வட்டி விகிதத்தை வசூலிக்கிறது. அதேசமயம் சிறப்பு விகிதம் 8.55 சதவீதம் முதல் 9.10 சதவீதம் வரை ஆகும்.
ஐசிஐசிஐ வங்கி
ஐசிஐசிஐ வங்கி கடன் தொகை ₹35 முதல் 75 லட்சம் வரை இருக்கும் பட்சத்தில் சம்பளதாரர்களுக்கு 9.5 முதல் 9.8 சதவீதம் வட்டி வசூலிக்கிறது.
சுயதொழில் கடன் வாங்குபவர்களுக்கு 9.65 சதவீதம் முதல் 9.95 சதவீதம் வரை வட்டி காணப்படும்.
மற்ற வங்கிகள்
பஞ்சாப் நேஷனல் வங்கி 8.4 சதவீதம் முதல் 11 சதவீதம் வரையும், பேங்க் ஆஃப் பரோடா 8.4 சதவீதம் முதல் 10.6 சதவீதம் வரையும் வட்டி விகிதத்தை வழங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“