நீண்ட கால, ஆபத்து இல்லாத முதலீடுகளுக்கு, பொது வருங்கால வைப்பு நிதி (PPF) முதலீட்டாளர்களிடையே மிகவும் விருப்பமான கருவிகளில் ஒன்றாக உள்ளது. வரி-சேமிப்பு நன்மைகள் மற்றும் வரி இல்லாத வருமானம் நீண்ட கால நிதி இலக்குகளுக்கு PPF ஐ சிறந்த முதலீடாக மாற்றுகிறது.
இது பொருத்தமான முதலீடாகத் தோன்றினால், முதலீடு செய்வதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய PPF திட்டத்தைப் பற்றிய சில விஷயங்கள் இங்கே உள்ளன.
PPF திட்டம் - முக்கிய அம்சங்கள்
PPF திட்டமானது வருமான வரி (I-T) சட்டத்தின் 80C பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்குகளை வழங்குகிறது. மேலும் வட்டிக்கும் வரி விலக்கு அளிக்கிறது.
இருப்பினும், முதலீட்டிற்கு 15 வருட லாக்-இன் காலம் பொருந்தும், இதன் போது நீங்கள் பணம் எடுக்க முடியாது.
மருத்துவ அவசரநிலை போன்ற விதிவிலக்கான சூழ்நிலைகளில் லாக்-இன் காலத்தில் பகுதியளவு திரும்பப் பெற இந்தத் திட்டம் அனுமதிக்கிறது.
ஒரு தனிநபர் ஒரு PPF கணக்கை மட்டுமே வைத்திருக்க முடியும், மேலும் இந்த திட்டம் இந்திய குடிமக்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
பிபிஎஃப் விஷயத்தில், மூலதன முதலீடு, சம்பாதித்த வட்டி மற்றும் முதிர்ச்சியின் போது பெறப்பட்ட இறுதி வருமானம் அனைத்தும் வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
குறைந்தபட்ச ஆண்டு வைப்புத் தொகையான ரூ. 500 உடன் நீங்கள் PPF முதலீட்டைத் தொடங்கலாம்.
அதிகபட்ச வருடாந்திர முதலீடு ரூ. 1.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்தில் குறைந்தபட்ச முதலீட்டை நீங்கள் செய்யத் தவறினால் உங்கள் கணக்கு செயலிழந்து போகலாம்.
PPF இன் கீழ் வழங்கப்படும் வட்டி ஒவ்வொரு காலாண்டின் தொடக்கத்திலும் தீர்மானிக்கப்படுகிறது மற்றும் அவ்வப்போது திருத்தத்திற்கு உட்பட்டது. PPF தற்போது ஆண்டுக்கு 7.1% வட்டி விகிதத்தை வழங்குகிறது, இது ஆண்டுதோறும் கூட்டும்.
PPF vs FD வழங்கும் வட்டி விகிதங்கள்
நீங்கள் 30% வரி வரம்பிற்குள் வந்தால், PPF இல் முதலீடு செய்வது வங்கி FD ஐ விட அதிக வருமானத்தை அளிக்கும். பெரும்பாலான வங்கிகள் தற்போது நீண்ட கால டெபாசிட்டுகளுக்கு 6.5% முதல் 7% வரையிலான விகிதங்களை வழங்குகின்றன.
எவ்வாறாயினும், அத்தகைய வைப்புத்தொகை மூலம் கிடைக்கும் வட்டியானது உங்களுக்குப் பொருந்தக்கூடிய ஸ்லாப் விகிதத்தின் அடிப்படையில் வரி விதிக்கப்படும். இவ்வாறு, வரி விதிப்புக்குப் பின், நீங்கள் பெறும் இறுதி வட்டி ஆண்டுக்கு 4.55% முதல் 4.90% வரை இருக்கும்.
மறுபுறம், PPF வருமானம் முற்றிலும் வரி இல்லாதது. எனவே, நீங்கள் தற்போதைய சந்தையில் 7.1% வட்டியைப் பெறுகிறீர்கள் என்றால், அது FDகள் வழங்கும் வரிக்குப் பிந்தைய வட்டியை விட ஆண்டுக்கு 2.22% முதல் 2.55% வரை அதிகமாக இருக்கும்.
நீங்கள் ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சம் மற்றும் குறைந்தபட்சம் ரூ. 500 முதலீடு மட்டுமே செய்ய முடியும் என்பதை நினைவில் கொள்க.
PPFல் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?
உங்கள் குழந்தைகளின் கல்விக்கு 15 ஆண்டுகளில் 25 லட்சம் தேவை என்று வைத்துக்கொள்வோம். எனவே, நீங்கள் ஆண்டுக்கு ரூ. 1 லட்சத்தை சேமித்து, தற்போதைய வட்டி விகிதமான 7.1% இல் கணக்கிட்டால், 15 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்வு காலத்தில் உங்களின் மொத்தத் தொகை ரூ.27,12,139 ஆக இருக்கும்.
அந்த வகையில், உங்கள் தேவையைப் பொறுத்து, உங்கள் நிதியை PPFக்கு ஒதுக்கலாம். PPF திட்டத்தில் வட்டி விகிதம் மத்திய அரசால் முடிவு செய்யப்பட்டு காலாண்டுக்கு ஒருமுறை அறிவிக்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/