23 வயதில் முதலீடு செய்ய் வேண்டிய மிகச் சிறந்த முதலீடு இதுவே.. வட்டி மட்டுமே 7.1% கிடைக்கும்!

டெபாசிட் செய்யாவிட்டாலும், ஏற்கெனவே இருக்கும் தொகைக்கு வட்டி வருமானம் கிடைக்கும்.

By: Updated: November 10, 2020, 01:29:08 PM

invesment tamil investment plans money : அடிப்படையில் ஒரு அற்புதமான முதலீட்டுத் திட்டம். பிஎஃப் திட்டத்தை ஒரு முதலீடு என சொல்வதை காட்டிலும் பாதுகாக்கு எனலாம். இத்திட்டம் மத்திய அரசின் ஆதரவுடன் இருப்பது கூடுதல் பலம். இதுமட்டுமல்லாமல், வரிச் சலுகைகள், வட்டி மற்றும் மெச்சூரிட்டிக்கு வரி தள்ளுபடி ஆகியவை பிஎஃப் திட்டத்தின் அட்டகாசமான அம்சங்கள்.

வருமான வரிச் சட்டப் பிரிவு 80சி கீழ் வரிச் சலுகைகளை பெற மிகவும் விரும்பித் தேர்வு செய்யப்படும் முதலீடுதான் பிஎஃப். எனினும், பிஎஃப் திட்டத்தின் மிக இளம் வயதிலேயே முதலீடு செய்யத் தொடங்கினால் அதிக பயன் கிடைக்கும். அதாவது, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் முதலீடு செய்யத் தொடங்கினால் 15 ஆண்டு காலம் நிறைவடைந்துவிடும்.

உதாரணமாக, 23 வயதில் பிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்கினால், 38 வயதிலேயே 15 ஆண்டுக் காலம் நிறைவடைந்துவிடும். 15 ஆண்டு நிறைவுக்கு பின் ஐந்து ஆண்டுகள் என்ற அடிப்படையில் நீங்கள் பிஎஃப் திட்டத்தை நீட்டித்துக்கொள்ளலாம். உதாரணமாக, 43 வயது வரை நீட்டிக்கலாம். பிறகு தேவையெனில் 48 வயது வரை நீட்டிக்கலாம்.

நீட்டிப்புக்கு பிறகு டெபாசிட் செலுத்தியாக வேண்டுமென கட்டாயமில்லை. அதேபோல, டெபாசிட் செய்ய விரும்பினால் செலுத்தலாம். சட்டப்படி, நீட்டிப்புக்கு பின், 80சி பிரிவு கீழ் வரிச் சலுகை பெறும் வரை டெபாசிட் செய்யலாம். டெபாசிட் செய்யாவிட்டாலும், ஏற்கெனவே இருக்கும் தொகைக்கு வட்டி வருமானம் கிடைக்கும்.

பிஎஃப் கணக்கு மெச்சூரிட்டிக்கு பின் ஓராண்டுக்குள் நீட்டிப்புக்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது பிஎஃப் திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.1% வட்டி கிடைக்கிறது. பிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்ய குறைந்தபட்ச வயது வரம்பு கிடையாது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Invesment tamil investment plans money investment schmes online investments ideas

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X