Advertisment

போஸ்ட் ஆபிஸ் ஆர்.டி முதலீடு, லட்சக்கணக்கில் வருமானம்: இதை ட்ரை பண்ணுங்க!

முதிர்வு காலத்தில் பெரிய தொகையைப் பெற, போஸ்ட் ஆபிஸ் ஆர்டி திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தின் விவரங்களைத் தெரிந்து கொள்வோம். இந்தத் திட்டத்தில் 3 மாதத்துக்கு ஒருமுறை வட்டி தீர்மானிக்கப்படுகிறது.

author-image
WebDesk
New Update
PostOffice, savings in postoffices, savings, kisan vikas patra, senior citizen savings scheme, recurring deposit, Savings, Scheme,அஞ்சல், முதலீடு,சேமிப்பு,பயன்

இந்த வட்டி விகிதங்கள் அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31, 2023 வரை பொருந்தும்.

Post Office Scheme | மாறிவரும் காலங்களுக்கு ஏற்ப பல்வேறு முதலீட்டு விருப்பங்கள் தற்போது உள்ளன. ஆனால் பாதுகாப்பான முதலீட்டிற்கான பலரின் முதல் தேர்வாக அஞ்சல் அலுவலகத் திட்டம் உள்ளது.

Advertisment

அஞ்சல் அலுவலக தொடர் வைப்புத் திட்டம் ஒரு சிறந்த மற்றும் வலுவான வருவாய் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய தொகையை முதலீடு செய்வதன் மூலம் பெரிய வருமானத்தைப் பெறலாம்.

வட்டி விகிதத்தின் பலன்

தபால் அலுவலகத்தின் சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை காலாண்டு அடிப்படையில் அரசு தீர்மானிக்கிறது. செப்டம்பர் கடைசி வாரத்தில், சிறுசேமிப்புத் திட்டத்தின் வட்டி விகிதங்களை அரசு கடைசியாக நிர்ணயித்துள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், அக்டோபர் மற்றும் டிசம்பர் 2023 க்கு இடையில், தபால் அலுவலகத்தின் 5 ஆண்டு ஆர்.டி. திட்டத்தின் வட்டி விகிதம் 6.70 சதவீதமாக உள்ளது.

முன்னதாக இது 6.50 சதவீதமாக இருந்தது. இந்நிலையில், மொத்தம் 20 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த வட்டி விகிதங்கள் அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31, 2023 வரை பொருந்தும்.

போஸ்ட் ஆபிஸ் ஆர்.டி. கால்குலேட்டர்

தபால் அலுவலக RD கால்குலேட்டரின் படி, நீங்கள் மொத்தம் 5 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 5,000 ரூபாய் முதலீடு செய்தால், இந்தத் திட்டத்தில் மொத்தம் 3 லட்சம் ரூபாய் செலுத்தியிருப்பீர்கள்.
வட்டியாக ரூ.56,830 கிடைக்கும். ஆக உங்களுக்கு ரூ.3 லட்சத்து 56 ஆயிரத்து 830 கிடைக்கும். மேலும், அஞ்சல் அலுவலகத்தின் தொடர் வைப்புத் திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு கடன் பெறும் வசதியும் உண்டு.

மொத்த வைப்புத் தொகையில் 50 சதவீதத்தை கடனாகப் பெறலாம். 3 ஆண்டுகளுக்குப் பிறகுதான் கடனைப் பெற முடியும்.
மேலும், அதன் வட்டி விகிதம் RD திட்டத்தின் வட்டி விகிதத்தை விட 2 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Post Office Scheme
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment