அனைத்து சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை மத்திய அரசு ஏப்ரல் 1, 2023 முதல் திருத்தியுள்ளது.
அதன்படி, பொது வருங்கால வைப்பு நிதி (PPF) தவிர, அனைத்து சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்களும் 10-70 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளன. இதனால் தற்போது 5 வருட டைம் டெபாசிட் முதலீட்டாளர்களால் விரும்பும் ஓர் திட்டமாக மாறியுள்ளது.
போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட்
அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாத உத்தரவாத வருமானத்தை எதிர்நோக்கும் முதலீட்டாளர்களுக்கு போஸ்ட் ஆபிஸ் ஓர் சிறந்த வாய்ப்பாகும்.
இந்த நிலையில், ஏப்ரல் 1, 2023 முதல், ஐந்தாண்டு கால அவகாசத்துடன் கூடிய போஸ்ட் ஆபிஸ் டிடி கடனுக்கான வட்டி விகிதம் அரசாங்கத்தால் ஆண்டுக்கு 7 முதல் 7.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை ரூ.1000 செலுத்தி தொடங்கிக் கொள்ளலாம். பின்னர் ரூ.100ன் விகிதத்தில் முதலீடு செய்ய வேண்டும். இதில் முதலீடு செய்ய உச்ச வரம்பு இல்லை.
ரூ.2.50 லட்சம் பெறுவது எப்படி?
இந்தத் திட்டத்தில் ஒருவர் 7.5% வட்டி விகிதத்தில் 5 ஆண்டுகளுக்கு ரூ.6 லட்சத்தை முதலீடு செய்தால், அவர் ரூ.2,69,969 வட்டியாகவும், முதலீடு முதிர்ச்சியடையும் போது ஒட்டுமொத்தமாக ரூ.8,69,969-ஐயும் பெறுவார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“