1 ரூபாய் இருந்தா கூட தங்கத்தில் முதலீடு செய்யலாம்? பண்டிகை காலத்தில் டாப் திட்டங்கள்!

தற்போதைய காலத்தில் தங்கத்தை வாங்க பெரிய முதலீடு தேவையில்லை. டிஜிட்டல் முறையில் மிக எளிதாக தங்கத்தை வாங்கலாம்.

தற்போதைய காலத்தில் தங்கத்தை வாங்க பெரிய முதலீடு தேவையில்லை. டிஜிட்டல் முறையில் மிக எளிதாக தங்கத்தை வாங்கலாம்.

author-image
WebDesk
New Update
invest in gold this festive season

தங்க பரிமாற்ற வர்த்தக நிதிகள், தனிநபர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய அனுமதிக்கின்றன. இவை, பங்குகளைப் போல் பங்குச் சந்தையில் வாங்கவும் விற்கவும் முடியும்.

இந்தியாவில் பண்டிகைக் காலங்களில் தங்கம் வாங்குவது பழங்கால பாரம்பரியம். தற்போது, பெரும்பாலான மக்கள் பண்டிகைகளின் போது தங்க நகைகள், தங்க நாணயங்கள் போன்ற வடிவங்களில் தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள்.
மேலும் தங்கத்தை பொருளாக வாங்கும் பட்சத்தில் அதற்கு காப்பீடு, பாதுகாத்தல் மற்றும் செய்கூலி, சேதாரம் என அதிக விலை கொடுக்க வேண்டியது உள்ளது.

வரிச் சலுகை

Advertisment

ஆகையால் முதலீட்டாளர்கள் பேப்பர் கோல்டு என்னும் டிஜிட்டல் தங்கத்துக்கு மாறிவருகின்றனர்.
வசதி மற்றும் பாதுகாப்பைத் தவிர, சில டிஜிட்டல் தங்க விருப்பங்களும் முதலீட்டாளர்களுக்கு மேலும் பயனளிக்கும் வரிச் சலுகைகளைக் கொண்டுள்ளன.

கவலை இல்லா சேமிப்பு

தங்கத்தில் முதலீடு செய்வதற்கு உங்கள் வருமானத்தில் இருந்து அதிக அளவு சேமிப்பு தேவை என்று நினைக்கலாம். டிஜிட்டல் தங்கத்தை பொறுத்தவரை மிக மிக குறைந்த விலையில் இருந்தும் தொடங்கலாம்.
1 கிராம் தங்கத்தின் மதிப்பு சற்று அதிகம் என்பதால் நீங்கள் 1 கிராம் தங்கம் கூட வாங்க தேவையில்லை. மாறாக மில்லி கிராமில் தங்கம் வாங்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கிறது. அதாவது உங்களிடம் ரூ.1 இருந்தால் கூட முதலீடு செய்யலாம்.

தங்கத்தின் தரம்

இந்தத் தங்கம் 24 காரட் முதல் 22 காரட் வரையும் கிடைக்கிறது. 24 காரட் என்பது 99.99 தூயத் தங்கம் ஆகும். இந்தத் தங்கத்துக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கிறது.

இறையாண்மை தங்கப் பத்திரங்கள் (SGB)

Advertisment
Advertisements

முதலீட்டாளர்கள் விலையை ரொக்கமாகச் செலுத்தி, முதிர்வின்போது மொத்தத் தொகையைப் பெற வேண்டும். தங்கத்தில் முதலீடு செய்வதற்கு இது பாதுகாப்பான வழியாகக் கருதப்படுகிறது,
இதில் 5 ஆண்டுகள் என நீண்ட முதலீட்டு நோக்கம் கொண்டவர்கள் முதலீடு செய்யலாம். ஒவ்வொரு ஆண்டும் இந்திய ரிசர்வ் வங்கி இந்தத் தங்கப் பத்திரங்களை விநியோகிக்கிறது. இந்தப் பத்திரங்களை விற்க முதலீட்டாளர்கள் இரண்டாம் நிலை சந்தையை அணுகலாம்.

இந்த பத்திரங்கள் முதலீட்டாளர்களுக்கு ஆரம்ப முதலீட்டுத் தொகையில் ஆண்டுக்கு 2.50 சதவீதம் (நிலையான விகிதம்) வட்டி விகிதத்தை வழங்குகின்றன. முதலீட்டாளர் அரை ஆண்டு அடிப்படையில் வட்டிக் கடன் பெறுகிறார்.
மறுபுறம், SGB களுக்கு 8 ஆண்டுகள் லாக்-இன் காலம் உள்ளது. ஒருவர் வெளியேறும் விருப்பத்தை ஐந்தாவது, ஆறாவது மற்றும் ஏழாவது ஆண்டுகளில் இருந்து வட்டி செலுத்தும் தேதிகளில் மட்டுமே பயன்படுத்த முடியும்.

மாற்றாக, முதலீட்டாளர்கள் 5 ஆண்டுகளுக்கு முன் வெளியேற வேண்டும் என்றால், அவர்கள் பங்குச் சந்தைகளில் SGB ஐ விற்க வேண்டும். மூலதன ஆதாயங்கள் அத்தகைய பத்திரங்களிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன.

தங்க பரிமாற்ற வர்த்தக நிதி (Gold ETF)

தங்க பரிமாற்ற வர்த்தக நிதிகள், தனிநபர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய அனுமதிக்கின்றன. இவை, பங்குகளைப் போல் பங்குச் சந்தையில் வாங்கவும் விற்கவும் முடியும்.
இவை அனைத்தும் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன. முதலீட்டாளர்கள் சந்தை நேரத்தில் வாங்கவோ அல்லது விற்கவோ டிரேடிங்கில் ஈடுபடலாம்.

தங்க பரஸ்பர நிதிகள்

கோல்டு மியூச்சுவல் ஃபண்டுகள், குடிமக்கள் டிமேட் கணக்கு இல்லாமல் முதலீடு செய்ய அனுமதிக்கும் திறந்தநிலை நிதிகளாகும்.
இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய தொழில்முறை வல்லுநரின் ஆலோசனை முக்கியம்.

தங்க நிதி

இதுவும் பரஸ்பர நிதிகள் திட்டத்தின்கீழ் வருவது ஆகும். இது குறித்த முழு புரிதல் தேவை.

தற்போதைய காலத்தில் தங்கத்தை வாங்க பெரிய முதலீடு தேவையில்லை. டிஜிட்டல் முறையில் மிக எளிதாக தங்கத்தை வாங்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Gold Rate Gold Investment Sovereign Gold Bonds

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: