ஒருவர் வரி விலக்கின் பலனைப் பெற விரும்பினால், பொது வருங்கால வைப்பு நிதியில் (பிபிஎஃப்) இந்தியா போஸ்டில் முதலீடு செய்யலாம்.
இது தொடர்பாக சமீபத்தில் ட்வீட்டில் இந்தியா போஸ்ட், “வரி விலக்கின் பலனைப் பெற இந்திய தபால் மூலம் பொது வருங்கால வைப்பு நிதியில் (பிபிஎஃப்) முதலீடு செய்யுங்கள்” எனக் கோரியிருந்தது.
இந்தத் திட்டத்தில் இந்தியாவில் வசிக்கும் எவரும் முதலீடு செய்யலாம். 18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள், மன வளர்ச்சி குன்றியர்கள் பாதுகாவலர் நியமித்துக் கொள்ளலாம்.
மேலும் இதில் வங்கியோ அல்லது போஸ்ட் ஆபிஸோ ஒரே ஒரு கணக்கில் மட்டுமே முதலீடு செய்ய முடியும்.
ஒரு நிதியாண்டில் குறைந்தபட்ச வைப்புத் தொகை ரூ. 500 மற்றும் அதிகபட்ச வைப்புத் தொகை ரூ. 1.50 லட்சம் ஆகும். அதன்படி, ஒரு நிதியாண்டில் ரூ. 50 மற்றும் அதிகபட்சம் ரூ. 1.50 லட்சம் வரை பல தவணைகளில் தொகையை டெபாசிட் செய்யலாம்.
இந்தத் திட்டத்தில், காலாண்டு அடிப்படையில் நிதி அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட வட்டி பொருந்தும். ஐந்தாவது நாளின் முடிவிற்கும் மாத இறுதிக்கும் இடைப்பட்ட காலண்டர் மாதத்திற்கான வட்டியானது கணக்கில் உள்ள மிகக்குறைந்த இருப்பில் கணக்கிடப்படும். வருமான வரிச் சட்டத்தின் கீழ் சம்பாதித்த வட்டிக்கு வரி இலவசம்.
கணக்கு தொடங்கிய ஆண்டைத் தவிர்த்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு சந்தாதாரர் நிதியின் போது 1 முறை திரும்பப் பெறலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/