'பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ' என்ற விழிப்புணர்வு பரப்புரைக்கு இணங்க, பெண் கல்வியை மேம்படுத்துவதற்காக சுகன்யா சம்ரித்தி யோஜனா (Sukanya Samriddhi Yojana -SSY) என்ற சமூக முயற்சியை மத்திய அரசு தொடங்கியது.
இந்தத் திட்டத்தின் உதவியுடன், பெற்றோர்க தங்கள் மகளின் எதிர்காலத்தைத் திட்டமிடலாம்; அவளுடைய எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கணிசமான நிதியை உருவாக்கலாம்.
ஜனவரி 2015 இல் தொடங்கப்பட்ட இந்த திட்டம், பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிக்கும் செய்தியை தெரிவிக்கும் வகையில் 'பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ' பிரச்சாரத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
வட்டி விகிதம்
இந்தத் திட்டம் தற்போது 8 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. இது தனிநபர்கள் ஒரு கணக்கிற்கு ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்ய அனுமதிக்கிறது.
மேலும், சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையின் மீது வருடாந்தர அடிப்படையில் கூட்டும் வட்டியானது அதன் தொடக்கத்திலிருந்து 21 வருடங்கள் முதிர்ச்சியடைகிறது.
ஒரு நபர் குறைந்தபட்சம் 250 ரூபாய் மற்றும் அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரை வருடாந்திர பங்களிப்பை செய்யலாம்.
யார் யார் கணக்கு தொடங்கலாம்?
பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் தங்கள் மகள் 10 வயதை அடையும் வரை அவர் சார்பாக எஸ்.எஸ்.ஒய் கணக்கைத் திறக்க தகுதியுடையவர்.
இதில், பெண் குழந்தை கண்டிப்பாக இந்தியராக இருக்க வேண்டும்.
ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகளுக்கு இரண்டு கணக்குகள் அனுமதிக்கப்படும். எனினும், இரட்டைப் பெண் குழந்தைகள் இருந்தால் மூன்றாவது SSY கணக்கைத் திறக்கலாம்.
67 லட்சம் ரிட்டன்
சுகன்யா சம்ரித்தி யோஜனாவில், பெற்றோர் ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சத்தை டெபாசிட் செய்வதன் மூலம் சுமார் ரூ.67 லட்சம் சம்பாதிக்கலாம்.
இந்தத் திட்டத்தின் தற்போதைய 8 சதவீத வட்டி விகிதத்தை கருத்தில் கொண்டு, அடுத்த 15 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ. 1.5 லட்சத்தை ஒரு பெற்றோர் முதலீடு செய்தால், கணக்கு முதிர்ச்சியின் போது ரூ.67.3 லட்சம் வரை ரிட்டன் கிடைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“