10 ஆண்டு முதலீடு, ரூ.16 லட்சம் ரிட்டன்.. அசத்தல் அஞ்சலக திட்டம்

இந்தத் திட்டத்தின் முதிர்வு காலத்தை முதலீட்டாளர்களே தேர்ந்தெடுக்கலாம்.

இந்தத் திட்டத்தின் முதிர்வு காலத்தை முதலீட்டாளர்களே தேர்ந்தெடுக்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Invest in THIS post office scheme to get Rs 16 lakh in 10 years

அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்

ஒருவர் பணத்தை சேமிக்க, அதனை சரியான திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். அதில் கவனமான திட்டமிடல் தேவைப்படுகிறது. ஏனெனில் ஒருவர் எங்கு முதலீடு செய்ய வேண்டும் என்பதைக் கண்டுபிடிப்பது கடினம்.
அந்த வகையில், நீங்கள் அதிகபட்ச மற்றும் பாதுகாப்பான வருவாயைப் பெறும் திட்டத்தை தேடினால் இந்த அஞ்சல சேமிப்பு திட்டம் உங்களது உதவியாக இருக்கும்.

Advertisment

மேலும், இந்தத் திட்டத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால், நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் தொகைக்கு ரூ.100 முதல் முதலீடு செய்ய அனுமதிக்கிறது.
ஆகையால், இத்திட்டம் அனைத்து பொருளாதார வகுப்பினருக்கும் பலன் அளிக்கக் கூடியதாகும்.

திட்டத்தின் முதிர்வு காலம்
திட்டத்தின் முதிர்வு காலத்தை முதலீட்டாளர்களே தேர்ந்தெடுக்கலாம். முதலீட்டாளர்கள் டெபாசிட் செய்யும் பணத்துக்கு மூன்று மாதத்துக்கு ஒருமுறை வட்டி வழங்கப்படுகிறது.

வயது வரம்பு
இத்திட்டத்தின் பயன் பெற குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள். அதிகபட்ச வயது வரம்பு வரையறுக்கப்படவில்லை. பெற்றோர் தங்களின் மைனர் குழந்தைகளுக்கும் கணக்கு தொடங்கலாம்.

Advertisment
Advertisements

கடன் வசதி
இந்த அஞ்சலக திட்டத்தில் கடனும் பெறலாம். கடனைப் பெற, உங்கள் தபால் நிலையக் கிளையை அணுக வேண்டும். உங்கள் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் 50 சதவீதத்தை கடனாகப் பெறலாம்.

எப்படி 16 லட்சம் கிடைக்கும்?
இந்த ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.10,000 தொகையை முதலீடு செய்தால், 10 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.16 லட்சத்துக்கு மேல் கிடைக்கும்.
நீங்கள் ஒவ்வொரு மாதமும் 10,000 ரூபாய் டெபாசிட் செய்தால், ஒரு வருடத்தில் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்வீர்கள். 10 வருடங்கள் முதலீடு செய்தால், 12 லட்சத்தை முதலீடாக வைப்பீர்கள்.
திட்டம் முதிர்ச்சியடைந்த பிறகு, நீங்கள் 4,26,476 ரூபாய் திரும்பப் பெறுவீர்கள். இதன் மூலம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்தம் ரூ.16,26,476 கிடைக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Post Office Scheme

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: