scorecardresearch

இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் ரூ.1 கோடி ரிட்டன் கன்ஃபார்ம்!

இந்தத் திட்டத்தில், குறைந்தபட்சம் ரூ. 1 கோடிக்கு உத்தரவாதம் ( Sum Assured ) அளிக்கப்படும்.

Invest in THIS scheme of LIC get direct benefit of Rs 1 crore
எல்ஐசி ஜீவன் ஷிரோமணி திட்டம்

முதலீடு என்பது வாழ்நாள் முழுவதும் நடைபெறும் விஷயம். வேலை செய்யும் ஆண்டுகள் முழுவதும் சேமிக்கவும் முதலீடு செய்யவும் திறமையான திட்டத்தை ஒருவர் வகுக்க வேண்டும்.

அதிகபட்ச மற்றும் பாதுகாப்பான வருமானத்திற்கு ஒருவர் எங்கு முதலீடு செய்ய வேண்டும் என்பதை முதலில் கண்டறிவது அவசியம் ஆகும்.
அந்த வகையில், எல்ஐசி ஒரு சிறந்த முதலீட்டு விருப்பமாகும். அதிலும் எல்ஐசி ஜீவன் ஷிரோமணி திட்டம் முதலீட்டாளர்கள் விரும்பும் திட்டம் ஆகும்.

இந்தத் திட்டத்தில், குறைந்தபட்சம் ரூ. 1 கோடிக்கு உத்தரவாதம் ( Sum Assured ) அளிக்கப்படும்.
எல்ஐசி ஜீவன் ஷிரோமணி திட்டம் 2017ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் பாலிசிதாரர்களுக்கு பேஅவுட் வசதியும் உள்ளது.

திட்டத்தில் குறைந்தப்பட்சம் ரூ.1 கோடி Sum Assured வழங்கப்படும். திட்டத்தின் கீழ் 14,16,18 மற்றும் 20 ஆண்டுகள் ஆகும். திட்டத்தில் இணைய 18 வயது குறைந்தப்பட்ச தகுதியாகும்.

இந்தத் திட்டத்தில் மாதம், காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு எனவும் பிரீமியம் செலுத்திக் கொள்ளலாம்.
திட்டத்தில் மாத பிரீமியமாக ரூ.5 ஆயிரம், காலாண்டு பிரீமியமாக ரூ.15 ஆயிரம், அரையாண்டு பிரீமியம் ஆக ரூ.25 ஆயிரம் ஆண்டு பிரீமியம் ஆக ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Invest in this scheme of lic get direct benefit of rs 1 crore

Best of Express