ஒரு நாளைக்கு வெறும் 2 ரூபாய் கட்டினால்... ஒரு வருடத்தில் ரூ. 10 லட்சம் கிடைக்கும்... இந்த போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம் செக் பண்ணுங்க!

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520 பிரீமியம் செலுத்தினால் ரூ.10 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520 பிரீமியம் செலுத்தினால் ரூ.10 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

author-image
WebDesk
New Update
2

ரூ.520 செலுத்தினால் ரூ.10 லட்சத்திற்கான காப்பீடு!

தபால் துறையின் கீழ் செயல்படும், இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி, டாடா ஏஐஜி ஜெனரல் இன்சூரன்ஸ் மற்றும் பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் ஆகிய பொது காப்பீடு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டுக்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.799 வரை பிரீமியத்தில் ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

Advertisment

சாமானிய மக்களுக்கும் விபத்துக் காப்பீட்டுத் திட்டங்களின் பலன்கள் சென்றடையும் வகையில், நாட்டின் மூலை முடுக்கெல்லாம் உள்ள அஞ்சலகங்கள் மூலம், மிகக் குறைந்த பிரீமியத் தொகையுடன் கூடிய இந்த விபத்துக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். விண்ணப்பப் படிவம், அடையாள / முகவரி சான்றின் நகல்கள் போன்ற எந்த விதமான காகிதப் பயன்பாடுமின்றி, தபால்காரர் கொண்டு வரும் ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தைப் பயன்படுத்தி, வெறும் 5 நிமிடங்களில் முற்றிலும் டிஜிட்டல் முறையில் இந்தப் பாலிசி வழங்கப்படுகிறது.

ரூ.10 லட்சம் / 15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீடு (விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு / நிரந்தர முழு ஊனம் / நிரந்தர பகுதி ஊனம்) ஆண்டுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்யும் வசதி தொலைப்பேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற்றுக் 
கொள்ளும் வசதி, விபத்தினால் ஏற்படும் மருத்துவச் செலவுகள் (உள்நோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.1,00,000 வரை)

Advertisment
Advertisements

திட்டம் வாயிலாக, விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு, நிரந்தர முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம் ஆகியவற்றுக்கு காப்பீட்டு தொகை வழங்கப்படும். விபத்தால் ஏற்படும் மருத்துவ செலவுகளை ஈடு செய்யும் வகையில், (உள்நோயாளி/வெளிநோயாளி) திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விபத்தினால் மரணம் / நிரந்தர முழு ஊனம் / நிரந்தர பகுதி ஊனம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் (அதிகபட்சம் 2 குழந்தைகள்) கல்விச் செலவுகளுக்கு ரூ.1,00,000/- வரை விபத்தினால் மரணம் / நிரந்தர முழு ஊனம் / நிரந்தரப் பகுதி ஊனம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் (அதிகபட்சம் 2 குழந்தைகள்) திருமணச் செலவுகளுக்கு ரூ.1,00,000 வரை

விபத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாட்களுக்கு, தினப்படி தொகை ஒரு நாளைக்கு அதிகபட்சம் ரூ.1000 வீதம் 15 நாட்களுக்கு (2 நாட்கள் கழிக்கப்படும்) விபத்தினால் உயிரிழக்க நேரிட்டால், ஈமக்கிரியைகள் செய்ய ரூ.5000 வரை. ஆண்டிற்கு வெறும் ரூ.555இல் ரூ.755இல் மேற்கண்ட பல்வேறு பலன்களை வழங்கும்.

இந்த விபத்துக் காப்பீட்டுப் பாலிசியை ஒருவர் எடுப்பதன் மூலம் எதிர்பாராமல் நிகழும் விபத்துகளால் ஏற்படும் உடல் நல நெருக்கடிகளையும் / நிதி நெருக்கடிகளையும் / உயிரிழப்புகளால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து விடுபட்டு குடும்பத்தின் எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும் என்பதால், பொதுமக்கள் அனைவரும் அருகில் உள்ள அஞ்சலகங்கள் மூலம் இந்த விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து பயன்பெற தபால் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

Post Office Savings Scheme

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: