Advertisment

எல்ஐசியின் பெஸ்ட் காப்பீடு திட்டம்.. வாழ்நாள் முழுவதும் பென்சன் பெறுங்கள்!

ஜீவன் சாந்தி பாலிசியில் உங்களுக்கு இரண்டு Options உள்ளன. முதலாவது Immediate Annuity மற்றும் இரண்டாவது Deferred Annuity ஆகும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
your life insurance policy cover Corona virus covid 19

இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான, எல்ஐசி பல்வேறு காப்பீட்டு திட்டங்கள் மற்றும் ஒய்வூதிய திட்டங்களை வழங்கி வருகின்றது. எல்ஐசி நிறுவனம் செயல்படுத்தி வரும் பென்சன் திட்டங்களிலேயே மிகவும் சிறப்பான ஒரு திட்டம்தான் ஜீவன் சாந்தி திட்டமாகும். இந்த பாலிசியில் முதலீடு செய்வதன் மூலம், ஒருவர் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியத்தை உத்தரவாதத்துடன் பெறலாம். அத்தகைய சூழ்நிலையில், ஒரு நபர் ஓய்வு பெற்ற பிறகு (LIC Life Insurance) அவர்களின் செலவுகளை எளிதில் பூர்த்தி செய்ய முடியும்.

Advertisment

ஜீவன் சாந்தி பாலிசியில் உங்களுக்கு இரண்டு Options உள்ளன. முதலாவது Immediate Annuity மற்றும் இரண்டாவது Deferred Annuity ஆகும். மேலும் இந்த புதிய திட்டமானது ஒற்றை பிரீமியம் ஆகும்.

முதல் அதாவது Immediate Annuity இன் கீழ் பாலிசியை எடுத்த உடனேயே ஓய்வூதிய வசதி கிடைக்கிறது. இந்த திட்டம் LIC இன் பழைய திட்டமான ஜீவன் அக்ஷயைப் போன்றது. மறுபுறம், Deferred Annuity விருப்பத்தில், பாலிசி எடுத்து 5, 10, 15 அல்லது 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதிய வசதி கிடைக்கிறது. நீங்கள் விரும்பினால், உங்கள் ஓய்வூதியத்தை உடனடியாக தொடங்கலாம் அல்லது பின்னர் தொடங்கலாம்.

இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதிய (Pension) அளவு நிர்ணயிக்கப்படவில்லை. உங்கள் முதலீடு, வயது மற்றும் ஒத்திவைப்பு காலத்திற்கு ஏற்ப உங்கள் ஓய்வூதியத்தைப் பெறுவீர்கள். முதலீட்டிற்கும் ஓய்வூதியத்தைத் தொடங்குவதற்கும் அல்லது அதிக வயதுக்கும் இடையில் நீண்ட காலம், உங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும். உங்கள் முதலீட்டில் செய்யப்படும் சதவீதத்திற்கு ஏற்ப எல்.ஐ.சி ஓய்வூதியம் (LIC Policy) அளிக்கிறது.

எல்ஐசி-யின் இந்த ஓய்வூதிய திட்டத்தினை ஆஃப்லைனிலும் ஆன்லைனிலும் எடுக்கலாம். அதில் பாலிசி எடுக்கும் நபர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் பல நன்மைகள் உண்டு.

LIC-ன் இந்த புதிய பென்ஷன் திட்டத்தை குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 79 வயது வரை உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளலாம். இந்த பாலிசியில் குறைந்தபட்சம் 1,50,000 ரூபாய் வரை பிரீமியமாக செலுத்திக் கொள்ளலாம். அதிகபட்சம் என்பது வரையரை இல்லை.

ஒருவர் குறைந்தபட்ச முதலீட்டில் 1,50,000 ரூபாய் திட்டத்தில் இணைகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு மாதாந்திரம், வருடாந்திரம், அரை ஆண்டு திட்டம், காலாண்டு திட்டம் என எவ்வளவு வருமானம் கிடைக்கும். மாதத்திற்கு 1000 ரூபாயும், இதே காலாண்டுக்கு 3,000 ரூபாயும், இதே அரையாண்டுக்கு 6,000 ரூபாயும், இதே ஆண்டுக்கு 12,000 ரூபாயும் கிடைக்கும். ஆக நீங்கள் எவ்வளவு அதிகம் தொகையை ஆரம்பத்தில் செலுத்துகிறீர்களோ, அவ்வளவு வருவாய் கிடைக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pension Plan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment