/tamil-ie/media/media_files/uploads/2018/11/idea-38.jpg)
நீங்கள் போஸ்ட் ஆபிஸ் திட்டங்களில் முதலீடு செய்து, ஓய்வுக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் தகுந்த வருமானத்தைப் பெறலாம்.
Post Office Monthly Income Scheme: அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டங்கள் (POSS) பல்வேறு வருமானக் குழுக்களில் உள்ள முதலீட்டாளர்களுக்கு நிதிப் பலன்களை வழங்குவதை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டு உள்ளன.
இந்தத் திட்டங்கள் பாதுகாப்பானவை. அரசாங்கத்தால் ஆதரிக்கப்படுவதால் நல்ல வருமானத்தை வழங்குகின்றன. ஓய்வுக்குப் பிறகு வழக்கமான வருமானத்தைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டங்கள் சிறந்த தேர்வாக இருக்கும்.
இதனால், நீங்கள் போஸ்ட் ஆபிஸ் திட்டங்களில் முதலீடு செய்து, ஓய்வுக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் தகுந்த வருமானத்தைப் பெறலாம்.
மேலும், இந்தத் திட்டத்தின் கீழ், நீங்கள் ஒருமுறை முதலீடு செய்து, டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் கிடைக்கும் வட்டியின் அடிப்படையில் மாதாந்திர பேஅவுட்டைப் பெறலாம்.
தனித்தனியாக ரூ.9 லட்சத்தை முதலீடு செய்வதன் மூலம் மாதம் ரூ.9,250 பேஅவுட்டைப் பெறலாம். இருப்பினும், நீங்கள் உங்கள் மனைவியுடன் கூட்டுக் கணக்கைத் தொடங்கினால், அதே தொகையை மாதந்தோறும் பெற மொத்தம் ரூ.15 லட்சத்தை முதலீடு செய்ய வேண்டும்.
தற்போது, இத்திட்டம் 7.4 சதவீத வருடாந்திர வட்டி விகிதத்தை வழங்குகிறது. அந்த வகையில், முதல் முதலீடு செய்து ஒரு மாதத்திற்குப் பிறகு பேஅவுட்டைப் பெறலாம்.
இந்தத் திட்டத்தின் காலம் 5 ஆண்டுகள் ஆகும். நீட்டிக்கும் வசதி உண்டு. இத்திட்டத்தை ரூ.1000 முதலீட்டில் தொடங்கலாம்.
மேலும் இந்தத் திட்டத்தில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் நீங்கள் செலுத்திய பணம் அப்படியே இருக்கும். முதிர்வு காலத்துக்கு பின்னர் அந்தப் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.