Post Office Scheme: கிசான் விகாஸ் பத்ராவின் ஆரம்ப இலக்கு விவசாயிகளின் சேமிப்பை ஊக்குவிப்பதாகும். மத்திய அரசின் இந்த போஸ்ட் ஆஃபிஸ் ஃடெபாசிட் திட்டத்தில், முதலீட்டாளர் ஒரே நேரத்தில் ஒரு தொகையை முதலீடு செய்யும் போது, குறிப்பிட்ட காலத்தில் இரட்டிப்பு தொகையை பெற முடியும்.
இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வட்டி விகிதம் ஏப்ரல் 1, 2023 முதல் மத்திய அரசால் 7.2 சதவீதத்தில் இருந்து 7.4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
வட்டி விகிதங்கள் அதிகரிப்பதால் இந்தத் திட்டத்தின் கீழ் வைக்கப்படும் தொகை விரைவில் இரட்டிப்பாகும். இந்தத் திட்டத்தில் ரூ.1000 முதல் முதலீடு செய்யலாம்.
இரட்டிப்பு லாபம் பெறுவது எப்படி?
இந்தத் திட்டத்தில் தற்போதைய வட்டி விகிதத்தின்படி ஒருவர் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் 115 மாதங்களில் ரூ.20 லட்சம் ரிட்டன் பெற முடியும்.
இந்தத் திட்டத்தில் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு, தேவையான வைப்புத்தொகை முதலீடு செய்யப்பட்ட பிறகு, கிஷான் விகாஷ் பத்ரா சான்றிதழ் வழங்கப்படும்.
KVP சான்றிதழைப் பெற பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரியையும் பயன்படுத்தலாம். இந்தப் பத்திரங்களை கூட்டாகவும் பெறலாம். 18 வயது பூர்த்தியடைந்த எவரும் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“