LIC Bima Ratna Plan : LIC பீமா ரத்னா திட்டம் தனிநபர்களுக்கு சேமிப்பு மற்றும் நிதிப் பாதுகாப்பை வழங்குவதற்காக இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தால் உருவாக்கப்பட்ட திட்டம் ஆகும்.
இந்த தனிநபர் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் கார்ப்பரேட் முகவர்கள், முகவர்கள், காப்பீட்டு சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (IMF) மற்றும் LICயின் பொதுவான சேவை மையங்கள் (CSC) மூலம் கிடைக்கிறது.
இத்திட்டத்தில் மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுதோறும் என நெகிழ்வான பிரீமியம் செலுத்திக் கொள்ளலாம்.
பிரீமியங்களுக்கு 30 நாட்கள் சலுகைக் காலம் வழங்கப்படுகிறது, மாதாந்திர பிரீமியங்களுக்கு 15 நாட்கள் சலுகைக் காலம் வழங்கப்படுகிறது.
வருடாந்திர கொடுப்பனவுகளுக்கு 2% தள்ளுபடி மற்றும் அரையாண்டு கொடுப்பனவுகளுக்கு 1% தள்ளுபடியும் இந்தத் திட்டத்தில் உண்டு. இந்தப் பாலிசியின் முதிர்வு காலம் 10, 15, 20, 25 ஆண்டுகள் என உள்ளது.
ரூ.23 லட்சம் பெறுவது எப்படி?
இந்தத் திட்டத்தில் 20 ஆண்டுகால பாலிசி திட்டத்தில் ஒருவர் தினந்தோறும் ரூ.138 வீதம் கட்டினால் ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கட்டியிருப்பார்.
20 ஆண்டுகளில் அவர் ரூ.10 லட்சம் சேமித்திருப்பார். அவருக்கு முதிர்ச்சியின்போது ரூ.23 லட்சத்து 5 ஆயிரம் வரை கிடைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“