இந்தியாவில் அமைப்பு சாரா துறையின் தொழிலாளர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் யோஜானா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தினமும் 2 ரூபாய் முதலீடு செய்வது மூலம், ஆண்டுத்தோறும் ரூ.36 ஆயிரம் வரை பென்ஷன் பெற்றிட முடியும்.
குறிப்பாக, இந்தத் திட்டம் மூலம் நடைபாதை வியாபாரிகள் ரிக்ஷா, ஆட்டோ டிரைவர்கள் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும்.
இந்தத் திட்டத்தில் 18 வயதுக்கு மேல் 40 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே இணைய முடியும். மாதாந்திர சேமிப்பாக 55 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும்.
இந்தத் திட்டத்தில் 18 வயதுடையவர்கள் இணைந்து மாதத்துக்கு 55 ரூபாய் செலுத்தினால் அடுத்த 18 ஆண்டுகளில் 36,000 ரூபாய் பெறமுடியும்.
அதேபோல், ஒருவர் 40 வயதில் இந்தத் திட்டத்தில் சேர விரும்பினால், ரூ. 200 மாதாந்திர டெபாசிட் செய்ய வேண்டும். அப்போதுதான், 60 வயதுக்குப் பிறகு, நீங்கள் ஓய்வூதியம் பெறத் தகுதியடைவீர்கள். மாத ஓய்வூதியமாக ரூ. 3000 அல்லது ரூ. ஆண்டுக்கு 36000 ரூபாய் கிடைக்கக்கூடும்.
இந்தத் திட்டத்தில் சேர வங்கிக் கணக்கு மற்றும் ஆதார் அட்டை கட்டாயமாகும்.
பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் யோஜானா திட்டத்தில் இணையும் வழிமுறையை கீழே காணுங்கள்
- முதலில் பிரதான் மந்திரி ஷ்ரம் மந்தன் யோஜனா திட்டத்தின் இணையதளமான maandhan.in/shramyogi க்கு செல்ல வேண்டும்.
- அடுத்து, ஹோம்பேஜ்ஜில் Apply Now கிளிக் செய்ய வேண்டும்.
- அதில், இரண்டு ஆப்சன்கள் திரையில் தோன்றும் நிலையில் Self Enrollment என்பதனை கிளிக் செய்ய வேண்டும்.
- பின்னர், அதில் கேட்கப்படும் மொபைல் நம்பர், விண்ணப்பதாரரின் பெயர், மின்னஞ்சல் ஐடி போன்றவற்றைக் குறிப்பிட்டு கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்.
- பின்னர், உங்கள் செல்போனுக்கு வரும் ஓடிபி எண்ணை பதிவிட வேண்டும்.
- இறுதியில், தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யும் பட்சத்தில், உங்கள் கணக்கு உடனடியாக தொடங்கப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil