scorecardresearch

ரூ 417 வீதம் முதலீடு; ரூ1 கோடி ரிட்டர்ன்: போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம் இது !

பாதுகாப்பான முதலீடு, வருமான விலக்கு, லட்சங்களில் ரிட்டன் என இந்தத் திட்டம் முதலீட்டாளர்கள் விரும்பும் திட்டமாக காணப்படுகிறது.

Public Provident Fund news in Tamil
பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மாற்றங்கள்

பொது வருங்கால வைப்பு நிதித் திட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டம் சிறு முதலீட்டாளர்களுக்கு வரப் பிரசாதமாக திகழ்கிறது.
பாதுகாப்பான இடர்பாடுகள் இல்லாத முதலீடு, வரி விலக்கு என பிபிஎஃப் என்னும் பொது வருங்கால வைப்பு நிதித் திட்டம் பல்வேறு சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் தற்போது 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. திட்டத்தில் வட்டி மாதாந்திர விகிதத்தில் கணக்கிடப்படுகிறது. முதலீட்டாளர்கள் தங்கள் பிபிஎஃப் கணக்கில் தொடர்ச்சியாக 15 ஆண்டுகள் வரை தங்கள் பணத்தை முதலீடு செய்யலாம்.

இருப்பினும், ஒருவருக்கு 15 வருட முடிவில் பணம் தேவையில்லை என்றால், அவர் PPF கணக்கின் காலத்தை எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் நீட்டித்துக் கொள்ளலாம். PPF கணக்கு நீட்டிப்பு படிவத்தை சமர்ப்பிப்பதன் மூலம் ஐந்து வருடம் ஐந்து வருடமாக இதைச் செய்யலாம்.

தினமும் ரூ.417 முதலீடு செய்யுங்கள், ரூ 1 கோடி வருமானம் பெறுங்கள்:

PPF திட்டத்தில் முதலீட்டாளர்கள் முறையாக முதலீடு செய்தால் ரூ.1 கோடி ரூபாய் வரை குவிக்க முடியும். இதற்கு முதலீட்டாளர்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும்.

உங்கள் PPF கணக்கில் ஒரு நாளைக்கு 417 ரூபாய் முதலீடு செய்தால், மாத முதலீட்டு சுமார் 12,500 ரூபாயாக இருக்கும். அதாவது, ஒரு வருடத்திற்கு, உங்கள் பொது வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் ரூ. 1,50,00 க்கும் சற்று அதிகமாக முதலீடு செய்வீர்கள். இது அதிகபட்ச வரம்பாகும்.

அந்த வகையில், 15 ஆண்டுகளில், திரட்டப்பட்ட மொத்தத் தொகை ரூ. 40.58 லட்சமாக இருக்கும், அதன்பிறகு ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் இரண்டு முறை முதிர்சிக்காலத்தை நீட்டிக்க வேண்டும்.

இதை 25 ஆண்டுகள் வரை தொடர்ந்து செய்து வந்தால், முதிர்வு காலத்தில் உங்களுக்குக் கிடைக்கும் தொகை ரூ.1.03 கோடியாக இருக்கும்.

இந்தத் தொகை முற்றிலும் வரி விலக்கு ஆகும். மேலும், மொத்த வட்டி கிட்டத்தட்ட 66 லட்சமாக இருக்கும். 25 ஆண்டுகளில் நீங்கள் டெபாசிட் செய்திருக்கும் மொத்தத் தொகை ரூ.37 லட்சமாக இருக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Invest rs 417 daily in ppf scheme get rs 1 crore at maturity