தினசரி ரூ.44 முதலீட்டில் ரூ.27 லட்சம் வருமானம்; எல்ஐசியின் சூப்பர் ப்ளான் இதுதான்!

எல்ஐசியின் ஜீவன் உமாங் பாலிசி; மாதம் ரூ. 1300 முதலீட்டில் ரூ.27 லட்சம் வருமானம் தரும் சிறந்த திட்டம்

Invest Rs.44 in LIC Jeevan Umang Policy earn Rs.27 lakh: இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐசி), பரந்த அளவிலான பாலிசிகளைக் கொண்டுள்ளது. இதில் குறைந்த எண்ணிக்கையிலான பிரீமியங்கள் முதிர்வு காலத்திற்குப் பிறகு பெரிய வருமானத்திற்கு வழிவகுக்கும். உங்கள் ஓய்வு மற்றும் முதுமைக்கு நீங்கள் சிறிது பணத்தை சேமிக்க விரும்பினால், எல்ஐசி பாலிசிகள் உங்களுக்கு சிறந்த வழி.

எல்ஐசி தனது முதலீட்டாளர்களுக்கு பலவிதமான பாலிசிகளை வழங்குகிறது. இந்த பாலிசிகள் குறைந்த ஆபத்து காரணி மற்றும் சிறந்த வருமானம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்திற்கும் பாதுகாப்பானது. எல்ஐசியில், மிகவும் பிரபலமான மற்றும் குறைந்த ஆபத்துள்ள முதலீட்டுத் திட்டங்களில் ஒன்று எல்ஐசி ஜீவன் உமாங் பாலிசி ஆகும்.

எல்ஐசி ஜீவன் உமாங் பாலிசி சிறிய அளவிலான முதலீட்டில் உங்களுக்கு நல்ல லாபத்தை அளிக்கும். முதலாவதாக, 90 நாட்கள் முதல் 55 வயது வரை உள்ள அனைவரும் இந்த பாலிசியை தேர்வு செய்யலாம். இது ஒரு நீண்ட கால முதலீட்டு வாய்ப்பாகும், முதிர்ச்சியடைந்த பிறகு, ஆயுள் காப்பீட்டுடன் மொத்த தொகையும் வழங்கப்படுகிறது.

எல்ஐசி ஜீவன் உமாங் பாலிசியின் கணக்கீடுகளின்படி, இந்த பாலிசியில் மாதந்தோறும் ரூ.1302 பிரீமியமாக செலுத்தினால், ஒரு வருடத்தில் ரூ.15,298 செலுத்துவீர்கள், அதாவது 30 வருடங்களுக்கு இந்த பாலிசியில் நீங்கள் பிரீமியம் செலுத்தியிருந்தால், நீங்கள் மொத்தமாக சுமார் 4.58 லட்சம் செலுத்தியிரூப்பீர்கள்.

நீங்கள் 31 வயதை அடைந்த பிறகு, உங்கள் முதலீட்டில் ஒவ்வொரு ஆண்டும் எல்ஐசி ரூ.40,000 செலுத்தும். 31 முதல் 100 ஆண்டுகள் வரை 40 ஆயிரம் ரூபாய் வருடாந்திர வருமானத்தை நீங்கள் எடுத்துக் கொண்டால், நீங்கள் கிட்டத்தட்ட ரூ. 27.60 லட்சத்தை வருமானமாக பெறுவீர்கள். முதலீட்டாளருக்கு தற்செயலான மரணம் அல்லது ஊனம் ஏற்பட்டால், ஒரு டேர்ம் ரைடர் நன்மையும் கிடைக்கும்.

எல்ஐசி ஜீவன் உமாங் பாலிசியின் ஒரு பெரிய விஷயம் என்னவென்றால், சந்தை அபாயங்கள் அவர்களின் வருமானம் அல்லது முதலீட்டில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. வருமானத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை எல்ஐசியின் வருவாய் மற்றும் இழப்புகள் மட்டுமே. இந்தக் பாலிசியானது உள்நாட்டு வருவாய்க் குறியீட்டின் 80C பிரிவின் கீழ் வரி விலக்குக்குத் தகுதிபெறுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Invest rs 44 in lic jeevan umang policy earn rs 27 lakh

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com