/tamil-ie/media/media_files/uploads/2022/06/hyd.jpeg)
அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்
மத்திய அரசின் அஞ்சல சேமிப்புத் திட்டங்களில் மக்களுக்கு பெரும்பாலும் விழிப்புணர்வு இல்லை. மாதந்தோறும் ஒரு பெரிய தொகை அல்லது வருடந்தோறும் ஒரு பெரிய தொகை இதுதான் சேமிப்பு என்றே பலரும் நினைக்கின்றனர்.
இன்றும் சிலர் கையில் உள்ள பணத்தை எவ்வாறு முதலீடு செய்வது என்பது குறித்து அறியாமல் திணறுகின்றனர். மேலும் சிலரோ பங்கு சந்தை உள்ளிட்ட அபாயம் காரணமாக முதலீடு செய்துவிடாமலே இருந்துவிடுகின்றனர். ஒரு கட்டத்தில் இப்பணம் கரைந்துபோனால் எதிர்கால திட்டங்கள் இன்றி அவதியுறுகின்றனர். சிறு துளி பெருவெள்ளம் என்பதையும் மறந்துவிடுகின்றனர்.
EPFO News: உங்க பி.எஃப் அக்கவுண்டுக்கு வரப்போகும் பணம்; பேலன்ஸ் இப்படி செக் பண்ணுங்க!
இதுபோன்ற நபர்களுக்காக நம்மூர் அஞ்சலகங்களிலே நல்ல வருமானம் கொடுக்கும் பாதுகாப்பான திட்டங்கள் உள்ளன.
இதில் முக்கியமான திட்டம்தான் கிராம் சுரக்ஷா. இந்தத் திட்டத்தில் இணைவது மிகவும் சுலபமானது. இதில் 19 முதல் 55 வயதுடைய நபர்கள் இணையலாம். ரூ.10 முதல் ரூ.10 லட்சம் வரை காப்பீடு பெறும் வசதியும் உள்ளது.
இந்தத் திட்டத்தில் 19 வயதுடைய நபர் மாதம் ரூ.1515 பிரீமியம் செலுத்தினால் 55ஆம் வயதில் முதிர்வாக ரூ.31 லட்சம் 60 ஆயிரம் கிடைக்கும். காலாண்டு, அரையாண்டு, வருடந்தோறும் பிரீமியம் உள்ளிட்ட வசதியும் உள்ளது. மேலும் இந்தத் திட்டத்தை கூடுதலாக 5 ஆண்டுகள் நீட்டித்தால் முதிர்வு தொகையாக ரூ.34 லட்சம் பெறலாம்.
இந்தத் திட்டம் சிறு முதலீட்டாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.