தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் பாதுகாப்பான முதலீட்டு சாய்ஸ் மட்டுமின்றி நல்ல வருமானமும் கிடைக்கக்கூடிய திட்டங்கள் ஆகும். இதில் இருக்கும் மிக முக்கியமான திட்டங்களில் இந்த கிராம சுமங்கல் யோஜனா திட்டமும் ஒன்று.
தபால் துறையின் சுமங்கல் அஞ்சலக ஆயுள் காப்பீட்டு திட்டம் என்பது ஒரு எண்டோவ்மெண்ட் பாலிசியாகும். இது கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு திட்டமாகும். இது கிராமப் புறங்களில் வசிக்கும் மக்களுக்குப் பணத்தை திருப்பி தருவதோடு கூடவே காப்பீட்டையும் தருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் இரண்டு வகையான திட்டங்கள் உள்ளன. ஒன்று அஞ்சல் ஆயுள் காப்பீடு, மற்றொருன்று கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு (RPLI) திட்டமாகும்.
இந்தியாவின் கிராமப்புற மக்களுக்காக கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு 1995 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
கிராம சுமங்கல் யோஜனா திட்டம் விவரம்
ஒன்று 15 ஆண்டுகால பாலிசி. மற்றொன்று 20 ஆண்டுகால பாலிசி. இந்த பாலிசியின் நுழைவு வயது 19 வயதாகும். 15 ஆண்டுகள் வரையறையான காலத்திட்டத்தைப் பெற அதிகபட்ச வயது 45 ஆண்டுகள் ஆகும் மற்றும் 20 ஆண்டுகள் கொண்ட பாலிசி பெற அதிகபட்ச வயது 40 ஆண்டுகள் ஆகும்.
திட்டத்தின் பலன்கள்
15 years Policy - 6 ஆண்டுகள், 9 ஆண்டுகள் மற்றும் 12 ஆண்டுகளில் 20-20 சதவீத பணம் திரும்பப் பெறுவீர்கள். முதிர்வு காலத்தில் மொத்த பணத்துடன் மீதமுள்ள 40 சதவீத பணம் போனஸாக வழங்கப்படும்.
20 years Policy - 8 ஆண்டுகள், 12 ஆண்டுகள் மற்றும் 16 ஆண்டுகள் நிறைவடைந்தால் 20-20 சதவீத பணத்தை நீங்கள் பெறுவீர்கள். திட்டம் முதிர்ச்சி காலத்தில் மொத்த பணத்துடன் மீதமுள்ள 40 சதவீத பணம் போனஸாக வழங்கப்படும்.
தினமும் ரூ95 முதலீடு
25 வயதான ஒருவர் 20 ஆண்டு பாலிசியை , ரூ7 லட்சம் உறுதி தொகையுடன் எடுத்திருந்தால், மாதத்திற்கு ரூ .2,853 பிரீமியம் செலுத்த வேண்டும். அதாவது, ஒரு நாளைக்கு ரூ .95 செலுத்த வேண்டும். காலாண்டு பிரீமியம் ரூ .8,449 ஆகவும், அரையாண்டு பிரீமியம் ரூ .16,715 ஆகவும், ஆண்டு பிரீமியம் ரூ .32,735 ஆகும்
14 லட்சம் முதிர்ச்சியில் பெறுவது எப்படி
8, 12 மற்றும் 16 ஆண்டுகளில் 20 சதவீதத்தில் ரூ .1.4 -1.4 லட்சம் பெறுவார். இறுதியாக, 20 ஆம் ஆண்டில்,உத்தரவாதமாக ரூ .2.8 லட்சமும் வழங்கப்படும்.
1000 ரூபாய்க்கு ஆண்டு போனஸ் ரூ48 ஆகும். அதாவது ரூ .7 லட்சம் உறுதி செய்யப்பட்ட தொகைக்கான ஆண்டு போனஸ் ரூ33 ஆயிரத்து 600 ஆகும். இந்த போனஸ் தொகை மொத்த பாலிசி காலத்திற்கு வழங்கப்படும். அதன்படி, 20 ஆண்டு கால பாலிசிக்கு போனஸாக ரூ6.72 லட்சம் வழங்கப்படுகிறது.
20 ஆண்டு கால பாலிசி காலத்தில் மொத்தம் ரூ. 13.72 லட்சம் லாபம் ஈட்டப்படும். இதில், 4.2 லட்சம் விதிமுறைகளின் படி முன்பே வழங்கப்பட்டுவிடும். மீதமுள்ள ரூ .9.52 லட்சம் முதிர்வு காலத்தில் செலுத்தப்படும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் தினமும் ரூ. 95 சேமித்தால் போதும் 14 லட்சத்திற்கு அதிபதியாகலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.