/tamil-ie/media/media_files/uploads/2022/06/wealth-rupee-money-759.jpg)
நீங்கள் சம்பளம் வாங்குபவராக இருந்தால், ஓவர் டிராஃப்ட் வசதி தொடர்பாக வங்கியில் இருந்து பல தகவல்தொடர்புகளைப் பெற்றிருக்க வேண்டும்.
ஆபத்தில்லா முதலீடு, பணத்துக்கு கியாரண்டி உத்ரவாதம் 124 மாதங்களில் நீங்கள் செய்த முதலீடு இரட்டிப்பு என மத்திய அரசின் இந்தத் திட்டம் முன்னணியில் உள்ளது.
கிஷான் விகாஷ் பத்ரா என்ற இத்திட்டத்துக்கு ஆண்டுக்கு 6.9 சதவீதம் காம்பவுண்ட் வட்டி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில், குறைந்தப்பட்சம் ரூ.1000 முதல் அதிகப்பட்சமாக 100இன் மடங்குகளில் விண்ணப்பிக்கலாம்.
இந்த முதலீடு 124 மாதங்கள், அதாவது 10 ஆண்டுகள் 4 மாதங்களில் இரட்டிப்பு ஆகும். இதனால் நீங்கள் 5 லட்சம் முதலீடு செய்தால் 124 மாதங்களில் 10 லட்சமாகவும், ரூ.50 லட்சம் முதலீடு செய்தால் 124 மாதங்களில் ரூ.1 கோடியாகவும் திரும்பக் கிடைக்கும்.
கிஷான் விகாஷ் பத்ரா திட்டத்தில் இணைவது மிகவும் சுலபமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் 10 வயதுக்கு உட்பட்ட மைனர் அல்லது மனநிலை தெளிவற்றவர்கள் இணைய பாதுகாவலர் நியமிக்கப்படுவது அவசியம்.
எனினும் இந்தத் திட்டத்தில் வரி விலக்கு கிடையாது. இதர வழிகளில் இருந்து வருமானம் என்பதன் அடிப்படையில் வட்டி கழிக்கப்படும்.
முதலீட்டாளர்களின் இறப்பின் போது சட்ட விதிமுறைகள் பின்பற்றப்பட்டு நாமினிக்கு இந்தப் பணம் செல்லும். இந்தக் கணக்கை 10 ஆண்டுகளுக்கு பின்னர் நீட்டிப்பும் செய்துக் கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.