மாகாண நியமன திட்டத்தின் கீழ் நிரந்தர குடியேற்றத்திற்காக, IRCC-யின் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கனடா தெரிவித்துள்ளது. இதற்கு தகுதியான வெளிநாட்டவரை தேர்வு செய்வதற்கான எக்ஸ்பிரஸ் நுழைவு குலுக்கல் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை நடைபெறும்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Canada sends invitations to foreigners to apply for permanent residency
அதன்படி, மாகாண நியமனத் திட்டத்திற்கான சமீபத்திய எக்ஸ்பிரஸ் நுழைவுக் குலுக்கல் 322, நவம்பர் 12-ஆம் தேதியன்று நடைபெற்றது.
அன்றைய தினம், தகுதியான வெளிநாட்டினர் 733 பேருக்கு எக்ஸ்பிரஸ் நுழைவு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டன. குறைந்த தரவரிசையில் உள்ளவர்கள் 812 CRS மதிப்பெண்களைப் பெற்றனர்.
ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தால், அவர்கள் தங்கள் எக்ஸ்பிரஸ் நுழைவு விவரங்களைச் சமர்ப்பித்த தேதி மற்றும் நேரத்தின் அடிப்படையில் கட்-ஆஃப் இருக்கும்.
மாகாண நியமனத் திட்டத்தின் கீழ் முந்தைய குலுக்கல் அக்டோபர் 21-ஆம் தேதி நடத்தப்பட்டது, அப்போது 648 எக்ஸ்பிரஸ் நுழைவு அழைப்பிதழ்கள் முதல் தரவரிசையில் உள்ள தகுதியான வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டன, குறைந்த தரவரிசையில் இருந்தவர்கள் 791 மதிப்பெண்களைப் பெற்றனர்.
மாகாண நியமனத் திட்டம், ஒரு குறிப்பிட்ட மாகாணம் அல்லது பிராந்தியத்தின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் விதமாக, கனடாவில் நிரந்தர குடியேறுவதற்கு தேவையான திறன்கள், கல்வி மற்றும் பணி அனுபவம் உள்ள தொழிலாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாகாணமும் மாணவர்கள், வணிகர்கள், திறமையான தொழிலாளர்கள் போன்ற குறிப்பிட்ட குழுக்களை கணக்கிட்டு அதன் குடியேற்ற திட்டங்களைக் கொண்டுள்ளது.
வயது, கல்வி, பணி அனுபவம் மற்றும் மொழித் திறன் போன்ற காரணிகளின் அடிப்படையில் அவர்களை தரவரிசைப்படுத்த கனடிய அரசாங்கம் விரிவான தரவரிசை முறையை (CRS) பயன்படுத்துகிறது.
கனடா எக்ஸ்பிரஸ் நுழைவு என்பது கனடாவில் நிரந்தர குடியேற்றத்தை நாடும் திறமையான புலம்பெயர்ந்தோருக்கான ஒரு திட்டமாகும், இது குடியேற்றம், அகதிகள் மற்றும் குடியுரிமை கனடா (IRCC) மூலம் ஃபெடரல் ஸ்கில்டு ஒர்க்கர் புரோகிராம், கனடியன் எக்ஸ்பீரியன்ஸ் கிளாஸ், ஃபெடரல் ஸ்கில்டு டிரேட்ஸ் புரோகிராம், மற்றும் ப்ரோவின்சியல் ப்ரோகிராம் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. .
கனடாவில் குடியேற விரும்பும் வெளி நாடுகளைச் சேர்ந்தவர்கள், ஒரு குறிப்பிட்ட மாகாணம் அல்லது பிராந்தியத்தில் வசிக்கவும், பணிபுரியவும் அனுமதிக்கும் வகையில் உள்ள மாகாண நியமனத் திட்டத்தின் மூலம் கனடிய நிரந்தரக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.