investment bank plans tamil investment plan in bank : சிறுவயதிலே சேமிக்கும் பழக்கம் வந்து விட்டால் கண்டிப்பாக அந்த பழக்கம் சாகும் வரை நம்மை விட்டு செல்லாது. இன்றைய அவசர உலகில் பெரும்பாலான குடும்பங்களில் குடும்ப தலைவர் மட்டுமில்லாமல் துணைவியார்களும் வேலைக்கு செல்கின்றனர்.
இருவரின் சேமிப்பும் பெரும்பாலும் வங்கிகளில் தான் உள்ளது. சாதாரண சேமிப்பு கணக்குகள் தொடங்கி, பிக்சட் டெபாசிட், 5 ஆண்டு சேமிப்பு, சேலரி அக்கவுண்ட் என பெரும்பாலும் வங்கிகளிலே கணக்குகள் தொடங்கப்படுகின்றன.
இப்படி வங்கிகளில் நாம் தொடரும் கணக்குகளில் எத்தனை விதமான சேமிப்புகள் உள்ளன என்பதை நாம் தெரிந்துக் கொள்வது அவசியம். அந்த வகையில் பொதுத்துறை வங்கிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் எஸ்பிஐ வங்கி வைத்திருக்கும் தொடர் வைப்பு நிதி பற்றி எத்தனை பேருக்கு தெரியும்?
investment bank plans tamil investment plan in bank இதோ தொடர் வைப்பு நிதி பற்றி முக்கிய தகவல்கள்:
1. எஸ்பிஐ வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு கணக்கு தொடர் வைப்பு நிதி. வங்கிகளில் மாதந்தோறும் முதலீடு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து லாபம் பெறக்கூடிய ஒரு திட்டம் தான் தொடர் வைப்பு நிதி திட்டம் எனப்படும் ரெக்கரிங் டெப்பாசிட்.
2. இந்தத் திட்டத்தில் மாத சம்பளம் வாங்குவோர் முதலீடு செய்து நல்ல லாபத்தைப் பெறலாம். இது நிரந்தர வைப்பு நிதி திட்டத்தை போன்ற ஒரு சேமிப்பு திட்டமாகும்.
3. இந்த திட்டத்தில் இருக்கும் ஒரு மாபெரும் சிறப்பு சலுகை என்னவென்றால் வெறும் ரூ.100 இருந்தாலே வங்கியில் கணக்கை தொடர முடியும்.
;
4. மாதம் ரூ. 10 முதல் இந்த கணக்கில் சேமிக்கலாம்.
5. குறிப்பாக இந்த தொடர் வைப்பு நிதி திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு அதிகப்படியான சலுகை வழங்கப்படுகிறது.
நடுத்தர மக்களின் நலனுக்காக எஸ்பிஐ வங்கியின் மிகப் பெரிய மாற்றம்! வீட்டுகடன் வட்டி பாதி குறைப்பு.
6. அவர்களுக்கு சேமிக்கும் பணத்திற்கு. 7 சதவீதம் முதல் வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.
7. 1 வருடம் 3 ஆண்டுகள்,5 ஆண்டுகள் என திட்டத்திற்கு ஏற்ப வட்டி விகிதம் மாறுப்படும். ஆனால் வழக்கமான சேமிப்பு கண்க்கில் வாடிக்கையாளர்களுக்கு எவ்வளவு வட்டி விகிதம் கிடைக்குமோ அதை விட 1 சதவீதம் இதில் அதிகம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil