/tamil-ie/media/media_files/uploads/2021/04/rajini-40.jpg)
கிஷான் விகாஸ் பத்ரா திட்டத்தில் முதலீடு பணம் 115 மாதங்களில் இரட்டிப்பு ஆகும்.
கிசான் விகாஸ் பத்ரா என்பது இந்திய தபால் அலுவலகத்தின் சான்றிதழ் திட்டமாகும். இது தோராயமாக 9.5 ஆண்டுகளில் (115 மாதங்கள்) முதலீட்டை இரட்டிப்பு ஆக்குகிறது. உதாரணமாக இந்தத் திட்டத்தில் ரூ.5000 முதலீடு செய்தால் முதிர்வின்போது ரூ.5 ஆயிரம் பெறுவீர்கள்.
சான்றிதழின் வகைகள்
ஒற்றை வகை சான்றிதழ்: இந்த வகையான சான்றிதழ் வயது வந்தவருக்கு தங்களுக்காகவோ அல்லது மைனர் சார்பாகவோ வழங்கப்படுகிறது.
கூட்டு ‘A’ வகைச் சான்றிதழ்: இந்த வகைச் சான்றிதழ் இரண்டு பெரியவர்களுக்குக் கூட்டாக வழங்கப்படுகிறது.
கூட்டு ‘பி’ வகைச் சான்றிதழ்: இந்த வகைச் சான்றிதழ் இரண்டு பெரியவர்களுக்குக் கூட்டாக வழங்கப்படுகிறது.
திட்டத்தின் தகுதிகள்
விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.
இந்து பிரிக்கப்படாத குடும்பம் (HUF) மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRIகள்) KVP இல் முதலீடு செய்ய தகுதியற்றவர்கள் ஆவார்கள்.
வட்டி
கிசான் விகாஸ் பத்ராவுக்கான வட்டி விகிதம், திட்டத்தின் முதலீடு செய்யப்பட்ட ஆண்டுகளின் எண்ணிக்கையைப் பொறுத்து மாறுபடும். தற்போதைய வட்டி விகிதம் 7.5% ஆகும். வட்டியைக் கூட்டுவதன் மூலம், உங்கள் வைப்புத்தொகையில் அதிக வருமானத்தைப் பெறுவீர்கள்.
முதிர்வு
கிசான் விகாஸ் பத்ராவிற்கான முதிர்வு காலம் 115 மாதங்கள், அதன் பிறகு நீங்கள் கார்பஸைப் பெறலாம். நீங்கள் தொகையை திரும்பப் பெறும் வரை, கிஷான் விகாஸ் பத்ராவின் முதிர்வுத் தொகையானது வட்டியைத் தொடரும்.
வரி விதிப்பு
கிஷான் விகாஸ் பத்ரா திட்டத்தில் முதலீடு 80C இன் கீழ் விலக்கு பெற தகுதியற்றது. மேலும் வட்டி வருமானம் முற்றிலும் வரிக்கு உட்பட்டது. TDS @ 10% ஒவ்வொரு வருடமும் வரவு வைக்கப்படும் வட்டியில் கழிக்கப்படுகிறது. முதிர்வு வருவாயும் வரி விதிக்கப்படாது.
முதலீடு
கேவிபி ரூ.1,000, ரூ.5000, ரூ.10,000 மற்றும் முதலீட்டிற்கு ரூ.50,000 ஆகிய மதிப்புகளில் கிடைக்கிறது. அதிகபட்ச வரம்பு இல்லை. ரூ.50,000 மதிப்புள்ள மதிப்புகள் ஒரு நகரத்தின் தலைமை அஞ்சலகத்தில் மட்டுமே கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.