Advertisment

ரூ.4 ஆயிரம் முதலீடு முதிர்ச்சியின்போது ரூ.22 லட்சமாக உயரும்; இந்த ஸ்கீம் தெரியுமா?

SSY Scheme | சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் ஆண்டுக்கு 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் முதல் 2 பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Investment of SSY Scheme in Rs 4000 will become Rs22 lakh on maturity

செல்வ மகள் சேமிப்பு திட்டம்

சுகன்யா சம்ரித்தி யோஜனாவில் முதலீடு செய்வதன் மூலம் 8.2% வட்டி விகிதத்தில் ரிட்டன் பெறலாம். இத்திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், நீண்ட கால முதலீடு காரணமாக, ஒரு நல்ல நிதியை உருவாக்க முடியும். இந்தத் திட்டத்தில் பெண் குழந்தைக்கு 10 வயதுக்குள் மட்டுமே கணக்கை திறக்க முடியும்.
இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.4 ஆயிரத்தைச் சேமித்தால் ஒரு நல்ல ரிட்டன் கிடைக்கும். நீங்கள் 2024ல் முதலீடு செய்ய ஆரம்பித்து உங்கள் மகளுக்கு 5 வயதாகிறது என்று வைத்துக்கொள்வோம்.
கணக்கின் முதிர்வு காலம் 21 ஆண்டுகள், அதாவது 2024 ஆம் ஆண்டில் முதலீடு செய்யத் தொடங்கினால், 2045 ஆம் ஆண்டில் வலுவான வருமானத்தைப் பெறலாம்.

Advertisment

ஒவ்வொரு மாதமும் ரூ.4,000 சேமித்தால், ஒரு வருடத்தில் ரூ.48,000 முதலீடு செய்ய முடியும். 15 வருடங்கள் கணக்கில் பணம் டெபாசிட் செய்ய வேண்டும். கணக்கீட்டின்படி, 2042க்குள் இந்த முதலீட்டைச் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் சுகன்யா சம்ரித்தி யோஜனாவில் ரூ.7 லட்சத்து 20 ஆயிரம் முதலீடு செய்திருப்பீர்கள்.
21 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2045 ஆம் ஆண்டில், முதிர்ச்சியின் போது, ​​நீங்கள் 15 லட்சத்து 14 ஆயிரம் வட்டி மட்டுமே பெற முடியும் என்று சொல்லலாம். அதாவது ₹ 7.20 லட்சம் முதலீட்டில் ₹ 15.14 லட்சம் வட்டி பெறலாம். முதிர்ச்சியின் போது, ​​முதலீட்டுத் தொகையும் வட்டித் தொகையும் சேர்த்து மொத்தம் 22 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Sukanya Samriddhi Yojana
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment