investment plans tamil investment plan in tamil : இன்னிக்கு தங்க விலை என்னனு பாருங்க… நினைக்க முடியாத அளவுக்கு நாளுக்கு நாள் உயர்ந்துக் கொண்டே வருகிறது. ஏறுமுகத்தில் தங்க விலை இருப்பதால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் கவனத்தை செலுத்தி வருகின்றனர்.
Advertisment
இப்பவும் போய் கடைகளில் வரிசையில் நின்று தங்கம் வாங்கும் நபர்களா நீங்கள்? அட நாடு எவ்வளவோ முன்னேறிடிச்சி பாஸ். இதையும் கொஞ்சம் தெரிஞ்சிக்கோங்க.ஆபரண தங்கம், கட்டி தங்கம் எல்லாம் விடுங்க. தங்கப்பத்திர முதலீடு பற்றி பார்க்கலாம் வாங்க.
ஆபரண தங்கம் மற்றும் கட்டி தங்கம் வாங்குவதை குறைப்பதற்காகவும், தங்கத்தில் மக்களின் முதலீட்டை அதிகரிக்கவும் அறிமுகப்படுத்தப்பட்டது தான் தங்கப்பத்திர முதலீடு. இப்போது வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களிலும் இந்த ஸ்கீம் வந்து விட்டது. இத்திட்டத்தில், ஒரு கிராம் முதல் அதிகபட்சம், 400 கிராம்தங்கத்தை முதலீடு செய்யலாம்.
Advertisment
Advertisements
முதலீடு செய்யும் ஒரு கிராம் தங்கத்தின் விலை, 4,852 ரூபாய் ஆகும்.பத்திரத்தின் முதிர்வு காலம், எட்டு ஆண்டுகளாகும். தேவை ஏற்பட்டால், 5, 6 மற்றும் ஏழு ஆண்டுகளில் விலகிக்கொள்ளலாம். ஆண்டு வட்டியாக, 2.5 சதவீதம் வழங்கப்படும். ஆறு மாதத்துக்கு ஒரு முறை வட்டியை பெற்றுக்கொள்ளலாம். தங்கப்பத்திரத்தின் பேரில், வங்கிகளில் கடன் பெறலாம். இப்பத்திரங்களை மற்றவர்களுக்கு பரிசாகவும் வழங்கலாம்.
இப்படி ஒரு சிறப்பான திட்டத்தை நீங்களும் பங்கு கொள்ளலாம். தங்கத்தில் முதலீடு என்பது என்றுமே லாபம் தரக்கூடியது. அதே போல் சேமிப்பில் இது நல்ல பயனை தரக்கூடியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil