/tamil-ie/media/media_files/uploads/2019/03/vicky-17.jpg)
iob netbanking online
iob fd interest rates : வங்கி நிரந்தர வைப்பு நிதி என்பது மிகவும் பிரபலமான சேமிப்புத் திட்டங்களில் ஒன்றாக இருக்கின்றது. நடுத்தர மக்களின் சேமிக்கும் பழக்கம், இந்தத் திட்டத்தை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றது.
இந்தியாவில் பிக்சட் டெபாசிட் தான் மிக முக்கியமான வங்கி முதலீடுகளில் ஒன்றாக விளங்குகிறது. ஒரு குறிப்பிட்ட கால வரம்புக்கு ஒரு குறிப்பிட்ட வட்டியைத் தரும் முதலீடு தான் பிக்சட் டெபாசிட் . இரு வகையான பிக்சட் டெபாசிட்கள் உள்ளன. முதலாவது வங்கிகளில் முதலீடு செய்யப்படுவது. அதிலும் இருவகை உண்டு. ஒன்று வங்கிகளில் செய்யப்படும் முதலீடு இன்னொன்று வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களில் செய்யப்படும் முதலீடு.
இந்த இரண்டுமே ரிசர்வ் வங்கியின் கட்டுப் பாட்டில் தான் இயங்குகின்றன. இந்த இரண்டிலும் ரூ. 1 லட்சம் வரையிலான முதலீ ட்டுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவாதம் தருகி றது.
அடுத்த வகையான பிக்சட் டெபாசிட் கார்ப்பரேட் நிறுவனங்களில் செய்யப்படுவது. பொது மக்களிடம் பணம் திரட்ட இந்த நிறுவனங்கள் பிக்சட் டெபாசிட்களை பெறுவதுண்டு. இந்த வகை முதலீடுகளுக்குக் கிடைக்கும் வட்டியும் அதிகம். ஆனால், இந்த முதலீடுகளுக்கு ரிசர்வ் வங்கியின் உத்தரவாதம் கிடையாது.
கனரா வங்கியில் பிக்சட் டெபாசிட் தொடர்கிறீர்களா? அப்ப அதிர்ஷ்டசாலி நீங்க தான்!
பொதுவாக பிக்சட் டெபாசிட்களில் போடப்படும் முதலீடு இரட்டிப்பு லாபத்தை தரும். அதில் வட்டி விகிதமும் கவனிக்க தவறக் கூடாது ஒன்று. சரி இதுஒரு புறம் இருக்க பொதுத்துறை வங்கியில் பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு என்ன லாபம் என்று பார்க்கலாமா?
இன்றைய தினம், இந்தியன் ஒவர்சீஸ் வங்கியில் அளிக்கபடும் வட்டி விகிதம் குறித்த விளக்கம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.