sbi bank state bank state bank of india interest sbi bank
iob interest iob bank interest : பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர்சிஸ் வங்கி அடிப்படை வட்டி விகிதத்தை 10 பைசா அளவில் குறைந்து 9.35 சதவீதமாக நிர்ணயித்துள்ளது.
Advertisment
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்சிஎல்ஆர் கட்டணம் 7.30 சதவீதத்திலிருந்து 7.20 சதவீதமாகக் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, ஒரு வருட கால வரம்புக்கான கடன்களுக்கு வட்டி விகிதம் 7.75 சதவீதத்திலிருந்து 7.65 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வட்டிக் குறைப்பானது (ஆகஸ்ட் 10ஆம் தேதி) இன்று முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
iob interest iob bank interest : வட்டி குறைவு!
ரிசர்வ் வங்கியின் 2 மாதங்களுக்கு ஒருமுறை நடக்கும் நிதிக்குழுக் கூட்டம் அண்மையில் நடந்தது. இந்த கூட்டத்தில் வங்கிக்கடனுக்கான வட்டி வீதத்தில் எந்தவிதமான மாற்றமும் செய்யவில்லை. அதன்படி வட்டி
Advertisment
Advertisements
இறுதிநிலை வட்டி வீதம் எனப்படும எம்எஸ்பி ரேட் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் 4.25 அளவிலேயே தொடர்கிறது.
இந் நிலையில் இந்தியன் ஓவர்சிஸ் வங்கி அடிப்படை வட்டி விகிதத்தை 10 பைசா அளவில் குறைந்து 9.35 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. தற்போது 9.45 சதவீதமாக உள்ள வட்டி வகிதம் 9.35 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த அடிப்படை வட்டி விகிதத்தை வைத்தே வங்கி கொடுக்கும் கடன் மற்றும் வாங்கும் கடனுக்கான வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்படும். இதனால் வங்கி டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதம் குறையும். அதேசமயம் வீட்டுக்கடன் உள்ளிட்ட பிற கடன்களுக்கான வட்டி விகிதமும் குறையும்.
தனியார் துறை வங்கியான ஹெச்டிஎஃப்சி தனது வட்டி விகிதத்தைக் குறைத்திருந்தது. எம்சிஎல்ஆர் விகிதத்தை 10 அடிப்படைப் புள்ளிகள் குறைப்பதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil