iob netbanking iob mobile banking: பொதுத்துறை வங்கிகளில் எஸ்பிஐ க்கு பிறகு மக்கள் அதிகம் நாடி செல்வது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை தான். எளிமையான விதிமுறைகள் குறைவான மினிமம் பேலன்ஸ், அபராத கட்டணங்கள் அதிகம் கிடையாது என ஐஓபி வங்கியில் இருக்கும் சில சிறப்பு அம்சங்கள் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்திருப்பது இதற்கு மிகப் பெரிய காரணம் என்றே கூறலாம்.
Advertisment
அந்த வகையில் இதுவரை இந்த தகவலை தெரிந்துக் கொள்ளாதவர்கள் இந்த செய்தி தொகுப்பு மூலம் தெரிந்துக் கொள்ளலாம். அதுமட்டுமில்லை தெரியாதவர்களுக்கு பகிரலாம். ஐஓபி வங்கியை பொருத்தவரையில் நீங்கள் அக்கவுண்ட் ஓபன் செய்யும் போதே உங்களால் நெட் பேங்கிங் வசதியை பயன்படுத்த முடியாது. அதாவது, கஸ்டர் ஐடி இருந்தால் போதும் நீங்களாகவே நெட் பேக்கிங்கை ஓபன் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற முறையே இங்கு இல்லை.
அது சேமிப்பு அக்கவுண்டாக இருந்தாலும் சரி, உங்களின் சம்பள கணக்காக இருந்தாலும் சரி. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? முதலில் ஆன்லைன் மூலம் நீங்கள் நெட் பேக்கிங்கிற்கு விண்ணப்பிக்க வேண்டும். அதுக் குறித்த விரிவான வீடியோ இங்கே.
iob netbanking iob mobile banking தேவையான ஆவணங்கள்:
உங்களின் வங்கி கணக்கு, கஸ்டமர் ஐடி, வங்கியின் முகவரி, உங்கள் வீட்டு முகவை அனைத்து விவரங்களும் தெளிவாக இருக்க வேண்டும். மேலே சொன்ன அனைத்து முறைகளையும் நீங்கள் செய்து முடித்து விட்டால், மறுநாளே வங்கிக்கு நேராக சென்று அந்த படிவத்தில் உங்களது கையெழுப்பத்தை இட்டு வங்கி அதிகாரியிடம் தர வேண்டும். அவர்கள் 2 நாட்களில் உங்களது நெட் பேக்கிங்கு வழி செய்வார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil