iob netbanking iob mobile banking iob : பொதுத்துறை வங்கிகளில் சிறந்த சேவையை வழங்கி வருகின்றது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி. இதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, வழங்கும் லோன் திட்டங்கள் குறித்த தகவல்களை வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
Advertisment
இந்தியாவில் கல்வியைத் தொடரும் மாணவர்களுக்காக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ரூ. 10 லட்சம் வரை கடன் வழங்கி வருகின்றது. ஆனால் வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ. 20 லட்சம் வரையில் அது வழங்குகின்றது. அதில் ரூ. 4 லட்சம் வரையிலான கடன் தொகைக்கு 12.25 விழுக்காடு வட்டியும், அதற்கு மேற்பட்ட தொகைக்கு 13.50 விழுக்காடு வட்டியும் வசூலிக்கப்படுகிறது.
ஆனால் உள் ஊரில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ. 4 லட்சத்துக்கும் மேல் 5 விழுக்காடும் வழங்கப்படும். அதுவே வெளிநாட்டில் படிப்பதென்றால் 15 விழுக்காடும் முன்தொகையாகச் செலுத்த வேண்டும்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, வழங்கும் ரூ. 4 லட்சம் வரையிலான கல்விக் கடனுக்கு, மாணவர்கள் வங்கியில் முன் தொகை (மார்ஜின்) செலுத்தத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisment
Advertisements
இந்த கடன் தொகையை எப்போது திருப்பி செலுத்தலாம்?
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியால் வழங்கப்படும் கல்விக் கடன் தொகையை படிப்பு முடிந்த 6 முதல் 12 மாதங்களுக்கு பின் திருப்பிச் செலுத்தலாம் என்பதோடு இது 5ஆண்டுகளில் இருந்து 7 ஆண்டுகளுக்குள் சம அளவிலான மாதத் தவணைகளில் செலுத்த வேண்டும்.
எம்.எஸ்.வேர்ட் (M.S.Word) ஆவண வடிவிலான கடன் விண்ணப்பத்தை நீங்கள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் இணையதளத்தில், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாரை அணுகலாம். அல்லது அருகில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாளரைத் தொடர்பு கொண்டு விண்ணப்பத்தை பெறலாம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”