iob netbanking iob net banking iob : பொதுத்துறை வங்கிகளில் எஸ்பிஐ க்கு பிறகு மக்கள் அதிகம் நாடி செல்வது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை தான். எளிமையான விதிமுறைகள் குறைவான மினிமம் பேலன்ஸ், அபராத கட்டணங்கள் அதிகம் கிடையாது என ஐஓபி வங்கியில் இருக்கும் சில சிறப்பு அம்சங்கள் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்திருப்பது இதற்கு மிகப் பெரிய காரணம் என்றே கூறலாம்.
அந்த வகையில் இதுவரை இந்த தகவலை தெரிந்துக் கொள்ளாதவர்கள் இந்த செய்தி தொகுப்பு மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.கடன்களுக்கான வட்டியைக் குறைத்துள்ளது.
இந்த வட்டிக் குறைப்பு இன்று முதல் (10.10.20) அமுலுக்கு வருகிறது. எம்சிஎல்ஆர் உடன் இணைக்கப்பட்ட கடனுக்கான வட்டி விகிதங்கள் 5 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் குறைந்த வட்டியில் கடன் பெற முடியும்.
அதே நேரத்தில் டெபாசிட்களுக்கான வட்டி குறைக்கப்படவில்லை. இத்தகவலை வங்கியின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் தெரியுமா?
ஐஓபி வங்கியை பொருத்தவரையில் நீங்கள் அக்கவுண்ட் ஓபன் செய்யும் போதே உங்களால் நெட் பேங்கிங் வசதியை பயன்படுத்த முடியாது. அதாவது, கஸ்டமர் ஐடி இருந்தால் போதும் நீங்களாகவே நெட் பேக்கிங்கை ஓபன் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற முறையே இங்கு இல்லை
நீங்கள் ஐஓபி வாடிக்கையாளரா அப்படியென்றால் ஐஓபி வங்கியின் இணையதள வங்கி சேவையின் பயன்களைப் பயன்படுத்த நீங்கள் முதலில் ஐஓபி இணையதள வங்கி சேவையில் பதிவு செய்ய வேண்டும்.
ஐஓபி இணையதள வங்கி சேவைக்கு பதிவு செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய வழிமுறைகளைப் பின்பற்றவும்.
www.iobnet.co.in. என்ற இணையதள முகவரியில் உழ்நுழையவும்.தனிநபர் அல்லது proprietary firm ஆக இருந்தால் தனிநபர் பதிவு (Register Individual) என்பதை சொடுக்கவும். அல்லது பெருநிறுவன பதிவு (Register Corporate) என்பதை சொடுக்கவும்.