iob netbanking online : பொதுத்துறை சேவையில் வாடிக்கையாளர்கள் தேவையில் அதிகம் கவனம் செலுத்தும் இந்தியன் ஒவர்சிஸ் வங்கியின் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இந்தியன் ஒவர்சிஸ் வங்கியில் பெர்சனல் லோன் வாங்கி இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இதை விட குட் நியூஸ் வேற என்னவாக இருக்கும் பாருங்கள்.
Advertisment
இதற்கு முன்பு வரை இந்தியன் ஒவர்சிஸ் வங்கியில் ஓராண்டு மற்றும் அதற்கு கூடுதலான காலத்திற்கு ஐந்து அடிப்படை புள்ளிகள் என்ற அளவில், கடன்களுக்கான வட்டி விகிதம் நிர்ணிக்கப்பட்டுள்ளது.
iob netbanking online : மிகப் பெரிய சலுகை!
15 நாட்களுக்கான வட்டி விகிதம் 8.15% சதவிகிதமாகவும், ஒரு மாதத்திற்கான வட்டி விகிதம் 8.30% சதவிகிதமாகவும், 3 மாதங்களுக்கு 8.45% சதவிகிதமாகவும், 6 மாதங்களுக்கு 8.50% சதவிகிதமாகவும், வருடத்திற்கு 8.65% சதவிகிதமாகவும், அதுவே இரண்டு ஆண்டுகளுக்கு 8.75% சதவிகிதமாகவும், 3 ஆண்டுகளுக்கு 8.85% சதவிகிதமாகவும் இருந்தது.
இந்நிலையில், கொரோனா நோய் தொற்றால் இந்தியாவின் மொத்த பொருளாதாரமும் தலை கீழானது. வங்கிகளில் கடன் வாங்கிய வாடிக்கையாளுக்கு மாதத்தவணை கட்ட ரிசர்வ் வங்கி ஆகஸ்ட் மாதம் வரை அவகாசமும் வழங்கியுள்ளது. இந்த நேரத்தில் வாடிக்கையாளர்களின் உண்மையான சேவகன் போல் ஐஓபி வங்கி ரெப்போ வீதத்துடன் இணைக்கப்பட்ட கடன்களுக்கான வட்டி விகிதத்தில் 0.40%-ஐ குறைத்து அறிவித்துள்ளது. இதனால் அனைத்து விதமான கடன்களின் வட்டி விகிதம் 7.25%லிருந்து 6.85%ஆக குறைந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news