IOB FD Interest: பல வகையான சேமிப்பு திட்டங்கள் இருந்தாலும், அதில் நல்ல வருமானத்துடன் பாதுகாப்பான முதலீட்டை கண்டறிவது அவசியமாகும். அதில், சிறந்த திட்டமாக இன்றளவிலும் திகழ்வது ஃபிக்சட் டெப்பாசிட் திட்டம் தான். இத்திட்டத்தில் வரிச் சட்டம் பிரிவு 80சி கீழ் வரிச்சலுகையும் கிடைக்கிறது. அண்மை காலமாக வங்கிகள் ஃபிக்சட் டெப்பாசிட் திட்டங்களின் வட்டி விகிதத்தை உயர்த்தி வரும் நிலையில், பொதுத் துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் குறைத்துள்ளது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பல்வேறு காலங்களின் ஃபிக்சட் டெப்பாசிட் திட்டங்களின் வட்டி விகிதங்களை 0.40 சதவீதம் குறைத்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கூற்றுப்படி, 7 முதல் 45 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் FD திட்டங்களுக்கு 3.40 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக வட்டி குறைக்கப்பட்டுள்ளது. 46 முதல் 90 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் FD திட்டங்களுக்கு 3.90 சதவீதத்திலிருந்து 3.50 சதவீதமாக வட்டி குறைக்கப்பட்டுள்ளது
91 நாட்களில் இருந்து 179 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் FD திட்டங்களுக்கு 4.40 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக வட்டி குறைக்கப்பட்டுள்ளது
180 நாட்கள் முதல் ஒரு வருடத்திற்கும் குறைவான காலக்கெடுவிற்குள் முதிர்ச்சியடையும் FD திட்டங்களுக்கு 4.90 சதவீதத்திற்கு பதிலாக 4.50 சதவீத வட்டியை பெறுவார்கள்.
கடந்த சில வாரங்களில், பல பொது மற்றும் தனியார் துறை வங்கிகள் FD திட்டங்களின் வட்டி விகிதத்தை மாற்றியுள்ளன. உதாரணமாக, ஐசிஐசிஐ வங்கி சமீபத்தில் FDகளுக்கான வட்டி விகிதத்தை 0.05% குறைத்துள்ளது.
எச்டிஎஃப்சி வங்கி, பேங்க் ஆஃப் பரோடா மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவையும் ஃபிக்சட் டெப்பாசிட் முதலீடுகளுக்கான வட்டி விகிதங்களை சமீபத்தில் மாற்றி அமைத்துள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil