iob savings account iob account : இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி. நீங்கள் ஒரு ஃபோன் செய்தால் போதும் உங்கள் வீடு தேடி வங்கி சேவை வந்துவிடும்.
Advertisment
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி. இது கடன் திட்டங்களில் தொடங்கி, பிக்சட் டெபாசிட் சேவை வரை வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த சேவையை வங்கி வருகிறது.
இந்த வங்கியில் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் தேவைப்படி பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.ஏற்கெனவே மூத்த குடிமக்களின் வைப்பு தொகைக்கு 0.50 சதவீத அதிக வட்டி, இலவசகாசோலை, சேமிப்பு கணக்கு தரம் தானாக மாறும் வசதி, ஆயுள் சான்றை சுலபமாக சமர்ப்பிக்கும் வசதி உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறது.
இந்நிலையில், வாடிக்கையாளர்கள் தற்போது தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கியமான வசதி என்றால் அது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் செயல்பட்டு வரும் ஐஓபி 80 பிளஸ் திட்டம் தான்.
80 வயதை அடைந்தவர்கள் முதியோர்கள் ‘ஐஓபி 80 பிளஸ்’ என்ற சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். இத்திட்டத்தின்படி வைப்புத் தொகைக்கு 0.25 சதவீத வட்டி கூடுதலாக கிடைக்கும்.
மேலும் குறைந்தபட்ச இருப்பு தொகை ரத்து, இலவச தனிப்பட்ட காசோலை புத்தகம், இலவச எஸ்எம்எஸ் தகவல், இலவச டெபிட் கார்டு போன்றவற்றை வழங்கும்.சில வங்கிக் கிளைகளில் வாடிக்கையாளர்களாக உள்ள 70 வயதைக் கடந்த முதியோர்களுக்குவீட்டு வாசலில் வங்கி சேவையை வழங்கும் திட்டத்தையும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிசெயல்படுத்தி வருகிறது
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil