ரயில் பயணிகள், தேவைப்பட்டால் ஒரு மாதத்தில் 12 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்று இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) தெரிவித்துள்ளது. பயணிகளில் குறைந்தது ஒரு பயணியாவது, ஆதார் சரிபார்ப்பு செய்வதன் மூலம் இந்த முன்பதிவை செய்யலாம் என ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.
அதேநேரம் ஒரு மாதத்தில் 6 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ஆதார் சரிபார்ப்பு தேவையில்லை என்று ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது. எனவே பழைய முறைப்படி ஒரு மாதத்தில் 6 டிக்கெட்டுகளை ஆதார் இல்லாமல் முன்பதிவு செய்யும் வசதி தொடர்கிறது.
ஒரு மாதத்தில் 6 க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகளையும் 12 டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்யும் வசதியைப் பெற, ஐஆர்சிடிசி பதிவுசெய்த பயனர் தனது சுயவிவரத்தில் ஆதார் கேஒய்சி விருப்பத்தைப் பயன்படுத்தி ஆதார் சரிபார்க்க வேண்டும். மேலும், ஒரு மாதத்தில் 6 டிக்கெட்டுகளையும் தாண்டிணால், முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டில் குறைந்தபட்சம் ஒரு பயணியையாவது, ஆதார் சரிபார்ப்புக்கு உட்படுத்த வேண்டும்.
ஆதார் சரிபார்ப்பு செயல்முறை:
ஆதார் மூலம் உங்கள் ஐஆர்சிடிசி பயனர் ஐடியை நீங்கள் சரிபார்க்கலாம்.
1. www.irctc.co.in என்ற இணையதள பக்கத்தில் உங்கள் உள்நுழைவு சான்றுகளை உள்ளிட்டு உள்நுழைய வேண்டும்.
2. எனது கணக்கு என்ற தாவலுக்குச் சென்று உங்கள் ஆதார் இணைப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
3. ஆதார் KYC பக்கம் தோன்றும், ஆதார் அட்டைப்படி உங்கள் பெயரை உள்ளிடவும், ஆதார் எண் அல்லது மெய்நிகர் ஐடியை வழங்கவும், தேர்வுப்பெட்டியை தேர்ந்தெடுத்து OTP அனுப்பு பொத்தானை கிளிக் செய்யவும்.
4. உங்கள் ஆதார் எண்ணுடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் கிடைக்கப் பெற்ற OTP ஐ உள்ளிட்டு OTP ஐ சரிபார்க்கவும் என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும்.
5. இப்போது, KYC விவரங்கள் ஆதார் மூலம் இணைக்கப்படும். பின்னர், ஆதார் சரிபார்ப்பு செயல்முறையை முடிக்க புதுப்பிப்பு பொத்தானை கிளிக் செய்யவும்.
6. உறுதிப்படுத்தல் செய்தியுடன் பாப்-அப் சாளரம் தோன்றும். அதன் பிறகு சாளரத்தை மூடிவிட்டு www.irctc.co.in இல் மீண்டும் உள்நுழைய வேண்டும்.
7. ஐஆர்சிடிசி இ -டிக்கெட்டிங் இணையதளத்தின் மேல் வழிசெலுத்தலில் என் கணக்குத் தாவலின் கீழ் உங்கள் ஆதார் இணைப்பைத் தேர்ந்தெடுக்கும்போது ஆதார் கேஒய்சி நிலையை சரிபார்க்கலாம்.
ஆதார் மூலம் பயணிகளை எவ்வாறு சரிபார்க்கலாம்?
1. www.irctc.co.in என்ற இணையதள பக்கத்தில் உங்கள் உள்நுழைவு சான்றுகளை உள்ளிட்டு உள்நுழைய வேண்டும்.
2. IRCTC முகப்புப்பக்கத்தில் என் கணக்குத் தாவலின் கீழ் எனது சுயவிவரத்தில் முதன்மைப் பட்டியலைச் சேர்/திருத்து இணைப்பிற்குச் செல்லவும். (எனது கணக்கு >> எனது சுயவிவரம் >> முதன்மை பட்டியலைச் சேர்க்கவும்/மாற்றவும்).
3. முதன்மைப் பட்டியல் சேர்த்தல் அல்லது திருத்துதல் பக்கத்தில், அனைத்து விவரங்களையும் அதாவது பெயர், பிறந்த தேதி, பாலினம், படுக்கை விருப்பம், உணவு விருப்பம், மூத்த குடிமகன் சலுகை (பொருந்தினால்), அடையாள அட்டை வகை மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை வழங்கவும்.
4. தொடர சமர்ப்பி பொத்தானை கிளிக் செய்யவும்.
5. வழங்கப்பட்ட விவரங்களைக் கொண்ட பயணிகள் முதன்மைப் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். இதை சேமிக்கப்பட்ட பயணிகள் பட்டியலில் பார்க்கலாம்.
6. பயணிகளின் ஆதார் சரிபார்ப்பு விவரங்களை சரிபார்க்க, "நிலுவையில் உள்ள ஆதார் சரிபார்ப்பு நிலையை சரிபார்க்க இங்கே கிளிக் செய்யவும்" என்பதை கிளிக் செய்யவும். விவரங்கள் சரியாக இருந்தால், சரிபார்ப்பு நிலை சரிபார்க்கப்பட்டது மற்றும் வெற்றி குறிப்பு திரையில் காட்டப்படும்.
ஒரு மாதத்தில் 6 க்கும் மேற்பட்ட மற்றும் 12 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான படிகள்:
1. www.irctc.co.in என்ற இணையதள பக்கத்தில் உங்கள் உள்நுழைவு சான்றுகளை உள்ளிட்டு உள்நுழைய வேண்டும், பயண விவரங்களை உள்ளிட்டு, முன்பதிவுக்குச் செல்லவும்.
2. ரயில் பட்டியல் பக்கத்தில், விரும்பிய ரயில் மற்றும் வகுப்பைத் தேர்ந்தெடுத்து, முன்பதிவைத் தொடரவும்.
3. பயணிகள் உள்ளீட்டு பக்கத்தில், PASSENGER பெயரைக் கிளிக் செய்து காட்டப்படும் பட்டியலில் இருந்து ஆதார் சரிபார்க்கப்பட்ட பயணியைத் தேர்ந்தெடுக்கவும். காட்சிப்படுத்தப்பட்ட இந்த பட்டியல் முதன்மை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து பயணிகளையும் சேர்த்துக் கொள்ளும்.
4. பயணிகளின் விவரங்கள் தானாகவே முன்பதிவு படிவத்தில் பெறப்படும்.
5. பயணிக்கும் பயணிகளில் ஒருவர் மட்டுமே ஆதார் சரிபார்க்கப்பட வேண்டும். அதுவும் PASSENGER பெயரை கிளிக் செய்வதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். மற்ற பயணிகளின் விவரங்களை நீங்களாகவே உள்ளிட வேண்டும்
6. முன்பதிவு செயல்முறையைத் தொடரவும்.
7. முன்பதிவு விவரங்களை மதிப்பாய்வு செய்து, பயணிகளின் கீழ் காட்டப்படும் ஆதார் எண்ணை சரிபார்க்கவும்.
8. உங்களுக்கு விருப்பமான பேமெண்ட் கேட்வேயை தேர்ந்தெடுத்து பேமெண்ட் பக்கத்திற்கு தொடரவும். வெற்றிகரமாக கட்டணம் செலுத்திய பிறகு, முன்பதிவு உறுதிப்படுத்தல் பக்கம் காட்டப்படும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil