இந்தியன் ரயில்வே டிக்கெட் புக்கிங்கை மேலும் எளிதாக்கியுள்ளது. ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தியுள்ள Confirmtkt செயலி மூலம் பாதுகாப்பாக ரயில் டிக்கெட்டை புக் செய்வது, ரயில் அட்டவணையை செக் செய்து ஆப்லைனில் செவ் செய்வது, இருக்கை இருப்பதை உறுதி செய்வது, இ-டிக்கெட்களுக்கு TDR பைல், டிக்கெட் கேன்சல் உள்பட பல வசதி உள்ளன.
IRCTC Confirmtkt செயலில் ரயிலில் எவ்வளவு டிக்கெட் இருக்கிறது, பெர்த் கிடைக்குமா,நேர அட்டவணை சரிபார்ப்பது,பயணங்களை நிர்வகித்தல், கட்டணக் கால்குலேட்டர், பிஎன்ஆர் ஸ்டேட்ஸ் என அனைத்து தகவல்களையும் பார்வையிடலாம்.
இதில், சதாப்தி எக்ஸ்பிரஸ், ராஜ்தானி எக்ஸ்பிரஸ், துரந்தோ எக்ஸ்பிரஸ், ஜன் சதாப்தி, கரிப் ரத், சூப்பர்ஃபாஸ்ட் ரயில்கள், இன்டர் சிட்டி, சம்பர்க் கிராந்தி, டபுள் டெக்கர், மெயில் எக்ஸ்பிரஸ் மற்றும் பிற பயணிகள் ரயில்கள் உட்பட அனைத்து வகையான ரயில்களும் உள்ளன.
ConfirmTkt செயலியில் டிக்கெட் புக் செய்யும் முறை
- முதலில், source and destination நிலையங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்
- அடுத்து, பயண தேதியை செலக்ட் செய்ய வேண்டும்
- பின்னர், திரையில் தோன்று ரயில் பட்டியலில், விருப்பமான ரயிலை முடிவு செய்ய வேண்டும்.
- அதில், ஸ்லீப்பர், 3ஏசி என வகுப்பை தேர்ந்தெடுக்க வேண்டும்.
- பின்னர், போர்டிங் பாயிண்ட் செலக்ட் செய்ய வேண்டும்
- தொடர்ந்து, பயணிகளின் விவரங்களையும், எந்த பேர்த் வெண்டும் என்ற விருப்பத்தையும் கொடுக்க வேண்டும்
- இதனையடுத்து, மொபைல் நம்பர், இமெயில் ஐடி போன்ற விவரங்களை பதிவிட வேண்டும்.
- அடுத்த திரையில், வேறு எந்த பெர்த் இருந்தால், டிக்கெட் புக் செய்யலாம் என்ற விருப்பம் கேட்கப்படும். அதனை உறுதிச்செய்ய வேண்டும்.
- இறுதியாக, டிக்கெட்டுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.
- பேமெண்ட் சக்சஸ் ஆனதும், ஐஆர்சிடிசி credentials -ஐ பதிவிட வேண்டும்.
- அவ்வளவு தான், ரயில் டிக்கெட் உங்களது மொபைலுக்கும், இமெயில் ஐடிக்கும் வந்திருக்கும்.
Confirmtkt செயலி உபயோகிக் மிகவும் ஈஸியாகவும், ரயில் சேவைகளை தொடர்பாக தகவல்களை விரைவாகவும் பெற முடியும். இச்செயலிக்கு ரயில் பயணிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil