/tamil-ie/media/media_files/uploads/2023/03/irctc-hdfc-credit-card.jpg)
http://www.irctc.co.in இல் டிக்கெட் முன்பதிவு செய்ய செலவழித்த ரூ.100க்கு 5 வெகுமதி புள்ளிகள் கிடைக்கும்.
ஐஆர்சிடிசி எச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்டு: இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஆர்சிடிசி) மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகியவை இணைந்து புதிய பயணக் கடன் அட்டையை அறிமுகப்படுத்தியுள்ளன.
இந்த IRCTC HDFC வங்கி கிரெடிட் கார்டு NPCI இன் ரூபே நெட்வொர்க்கில் கிடைக்கும். இது தொடர்பான ஒரு கூட்டறிக்கையில், “IRCTCயின் டிக்கெட் இணையதளம் மற்றும் IRCTC Rail Connect செயலி மூலம் IRCTC HDFC வங்கி கிரெடிட் கார்டு ரயில் டிக்கெட் முன்பதிவுகளில் பிரத்தியேகமான பலன்கள் மற்றும் அதிகபட்ச சேமிப்பை வழங்கும்” என்று கூறியுள்ளது.
முக்கிய அம்சங்கள்
- கார்டு வழங்கிய 30 நாட்களுக்குள் கார்டை செயல்படுத்தினால் ரூ.500 அமேசான் வவுச்சர் கிடைக்கும்.
- http://www.irctc.co.in இல் டிக்கெட் முன்பதிவு செய்ய செலவழித்த ரூ.100க்கு 5 வெகுமதி புள்ளிகள் கிடைக்கும்.
- mart Buy மூலம் முன்பதிவு செய்தால் 5% கேஷ்பேக் வழங்கப்படும்.
- IRCTC இணையதளம் மற்றும் ஆப்ஸில் 1% பரிவர்த்தனை கட்டணங்கள் தள்ளுபடி கிடைக்கும்.
எப்படி விண்ணப்பிப்பது?
IRCTC மற்றும் HDFC வங்கியின் இணையதளங்கள் மூலம் IRCTC HDFC வங்கி கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
கார்டின் முக்கிய விவரங்களை ஆப் மூலம் அணுகலாம் அல்லது கார்டுக்கு விண்ணப்பிக்க அருகிலுள்ள HDFC வங்கிக் கிளைக்கும் நீங்கள் செல்லலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.