Advertisment

ரயில் டிக்கெட் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்; இத செஞ்சு ஈஸியா ட்ராவல் பண்ணுங்க!

ரயிலில் முன்பதிவு செய்த டிக்கெட் தொலைந்துவிட்டதா? பதற்றம் வேண்டாம்; ரயில்வேயின் இந்த விதிகளைப் பின்பற்றினால் சிக்கல் இல்லாமல் பயணிக்கலாம்; விவரம் இதோ

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ரயில் டிக்கெட் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்; இத செஞ்சு ஈஸியா ட்ராவல் பண்ணுங்க!

IRCTC new rules for ticket lost situation easy steps: உங்களின் முன்பதிவு செய்த ரயில் டிக்கெட் தொலைந்துவிட்டால், இனி நீங்கள் கவலைப்பட வேண்டாம். ரயில்வே எளிய விதிகளைப் பின்பற்றினால் நீங்கள் எந்த சிக்கல் இல்லாமலும் பயணம் செய்யலாம்.

Advertisment

இந்திய ரயில்வேயில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். ஆனால் இந்த பயணத்தின் போது எங்காவது உங்கள் டிக்கெட்டை தொலைத்துவிட்டால் என்ன செய்வது. அத்தகைய சூழ்நிலையில், டிக்கெட் பரிசோதகர் உங்களைப் பிடித்துவிட்டால் என்ன செய்வது என்ற கவலை உங்களுக்கு இருக்கலாம். ஆனால் நீங்கள் பீதி அடையத் தேவையில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் ரயில்வே சில விதிகளை வகுத்துள்ளது. ரயில் டிக்கெட் தொலைந்தால் என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.

பயணத்தின் போது உங்கள் டிக்கெட் தொலைந்துவிட்ட நிலையில், மொபைலில் இருந்து டிக்கெட்டைக் காண்பிக்கும் வசதி கூட உங்களிடம் இல்லை என்றால், டிக்கெட் பரிசோதகர் மூலம் உங்களுக்காக தயாரிக்கப்பட்ட புதிய டூப்ளிகேட் டிக்கெட்டைப் பெறலாம். இதற்கு ரூ.50 அபராதம் செலுத்த வேண்டும். ஆனால், இதற்கு டிக்கெட் தொலைந்துவிட்டது என்று தெரிந்தவுடன் டிக்கெட் பரிசோதகரை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும். முழு விஷயத்தையும் அறிந்த பிறகு, டிக்கெட் பரிசோதகர் உங்களுக்காக ஒரு புதிய டிக்கெட்டை வழங்குவார்.

இதையும் படியுங்கள்: உங்கள் பணம் ‘டபுள்’ ஆகணுமா? போஸ்ட் ஆபிஸின் இந்த திட்டத்தில் முதலீடு செய்யுங்கள்!

ரயில்வே விதிகளின்படி, கவுன்டரில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தால், ஸ்லீப்பர் வகுப்பிற்கு 50 ரூபாயும், ஏசி வகுப்பிற்கு 100 ரூபாயும் அபராதம் செலுத்த வேண்டும். மறுபுறம், இறுதி பயணிகள் பட்டியல் தயாரித்த பிறகு டிக்கெட்டை தொலைத்துவிட்டதாக நீங்கள் புகாரளித்திருந்தால், நீங்கள் டிக்கெட்டில் 50 சதவீதம் வரை அபராதம் செலுத்த வேண்டும்.

அதேநேரம் நீங்கள் நிர்ணயிக்கப்பட்ட பயண வரம்பை மீறி பயணிக்க வேண்டியிருந்தால், இந்திய ரயில்வே இதற்கான விதிகளையும் உருவாக்கியுள்ளது, இதற்கு நீங்கள் டிக்கெட் பரிசோதகரிடம் சென்று உங்கள் பயணத்தை தொடர்வதற்கான சில பெயரளவு கட்டணங்களைச் செலுத்தி மேலும் நீங்கள் பயணம் செய்ய வேண்டிய நேரம் வரை நீட்டிக்கலாம். இதற்கு நீங்கள் ஒரு குறிப்பிட்ட அபராதம் செலுத்த வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Train Business Irctc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment