IRCTC BoB Rupay Card Update : இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் (IRCTC) ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான வசதியான வழியை வெளியிட்டுள்ளது. இதில் முன்பதிவு செய்யப்பட்ட மற்றும் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை ஆன்லைனில் பதிவு செய்யும் செயல்முறையை எளிதாக்க, ஐஆர்சிடிசி (IRCTC) பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆன்லைன் டிக்கெட் முன்பதிவை ஊக்குவிக்கும் வகையில், ஐஆர்சிடிசி அவ்வப்போது பல சலுகைகளை அறிமுகப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் தற்போது ஐஆர்சிடிசி பிஒபி ரூபே (IRCTC BoB RuPay) காண்டாக்ட்லெஸ் கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்த பாங்க் ஆஃப் பரோடா ஃபைனான்சியல் சொல்யூஷன்ஸ் லிமிடெட் (BFSL) உடன் கைகோர்த்துள்ளது. அடிக்கடி ரயில் பயணம் செய்பவர்களுக்கு அதிகபட்ச சேமிப்பை வழங்குவதற்காக இந்த சிறப்பு கிரெடிட் கார்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார்டைப் பயன்படுத்தி ஏசி ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்பவர்களுக்கு தள்ளுபடி விலையில் கிடைக்கும்.
பிஒபி (BoB) அட்டையின் மற்ற நன்மைகள்
இது மட்டுமல்லாமல் இந்த பிஒபி அட்டைதாரர்களுக்கு வேறு சில நன்மைகள் உள்ளன. எரிபொருள் முதல் மளிகை பொருட்கள் வரையிலான பிற வகைகளில் ஷாப்பிங் செய்வதற்கும் பல நன்மைகளை இந்த கார்டு வழங்குகிறது. இந்த கார்டை வைத்து சர்வதேச பரிவர்த்தனைகளுக்கும், ஜேசிபி நெட்வொர்க்கின் ஏடிஎம்களுக்கும் பயன்படுத்தலாம்.
இந்த கார்டு வைத்துள்ளவர்கள்மொபைல் ஆப்ஸ் அல்லது ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளம் மூலம் 1AC, 2AC, 3AC, CC அல்லது எக்ஸிகியூட்டிவ் கிளாஸ் முன்பதிவு செய்வதன் மூலம் 40 ரிவார்டு புள்ளிகளைப் பெறலாம்.
இந்த கார்டு ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது தொடர்பான அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் ஒரு சதவீத கட்டண விலக்கு அளிக்கும்.
கார்டு வழங்கப்பட்ட 45 நாட்களுக்குள் ஒரு நபர் 1,000 ரூபாய் செலவழித்தால், அவர் 1,000 வெகுமதி புள்ளிகளைப் பெறலாம்.
மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகளில் 100 ரூபாய் செலவழித்தால், கார்டுதாரர்களுக்கு நான்கு வெகுமதி புள்ளிகள் வழங்கப்படும். மற்ற ஒவ்வொரு வகைக்கும், இரண்டு வெகுமதி புள்ளிகள் கிடைக்கும்
அனைத்து எரிபொருள் பம்புகளிலும் ஒரு சதவீதம் எரிபொருள் கூடுதல் கட்டணம்.
ஐஆர்சிடிசியில் தினசரி 7 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட் முன்பதிவு
இது குறித்து நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) தலைமை இயக்க அதிகாரி பிரவீணா ராய் கூறுகையில், ஐஆர்சிடிசியில் தினசரி 7 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட் முன்பதிவுகள் நடைபெறுகின்றன. கிரெடிட் கார்டு அறிமுகமானது கண்டிப்பாக இந்த எண்ணிக்கையை அதிகரிக்கும் என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil