ரயில் பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை ஐஆர்சிடிசி வெளியிட்டுள்ளது. புதிய அறிவிப்பின்படி, இனி நீங்கள் புக் செய்த ரயிலில் ஏற ஒரிஜினல் போர்டிங் பாயிண்ட்-க்கு செல்ல வேண்டிய கட்டாயம் கிடையாது. இதற்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது. ஒருவேளை போர்டிங் ஸ்டேஷனை மாற்றாமல், ரயில் நிலையம் மாறி ஏறினால் தான், அபராதம் செலுத்த வேண்டிய நிலைமை ஏற்படும்.
சில நேரங்களில் திடீரென போர்டிங் ஸ்டேஷனை மாற்ற வேண்டிய நிலை ஏற்படும். உதாரணமாக, நீங்கள் ரயிலில் டிக்கெட் புக் செய்த போர்டிங் ஸ்டெஷன் தொலைவில் இருக்கலாம். அச்சமயத்தில், நீண்ட தூரம் பயணித்தால் ரயிலை மிஸ் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, உங்களுக்கு அருகில் உள்ள ரயில் நிலையத்தில் ஏறும் வகையில் போர்டிங் ஸ்டேஷனை மாற்றிக்கொள்ள வேண்டும்.
ஐஆர்சிடிசி இந்த வசதியை ஆன்லைன் வாயிலாக டிக்கெட் புக் செய்தோருக்கு மட்டுமே வழங்கியுள்ளது. மாறாக, ஏஜென்ட் வழியாக புக் செய்தவர்களுக்கு இந்த வசதி கொடுக்கப்படவில்லை.போர்டிங் ஸ்டேஷனை மாற்றிவிட்டால், சம்பந்தப்பட்ட நபரால் மீண்டும் ஒரிஜினல் போர்டிங் ஸ்டேஷனில் ரயில் ஏற முடியாது. அதே போல், ஒருவரால் ஒருமுறை மட்டுமே போர்டிங் ஸ்டேஷனை மாற்றிக்கொள்ள முடியும்.
குறிப்பு: போர்டிங் ஸ்டேஷனை மாற்ற விரும்பும் எந்தவொரு பயணியும், ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன் ஆன்லைனில் மாற்றம் செய்ய வேண்டும்.
போர்டிங் ஸ்டேஷனை மாற்றும் எளிய வழிமுறை
- முதலில் ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ தளம் https://www.irctc.co.in/nget/train-search செல்ல வேண்டும்.
- அதில், லாகினுக்கு தேவையான ஐடி, பாஸ்வேர்டு பதிவிட வேண்டும்.
- அடுத்து, Booking Ticket History ஆப்ஷனை கிளிக் செய்து, போர்டிங் மாற்ற விரும்பும் ரயிலை தேர்ந்தெடுக்க வேண்டும்.
- பின்னர், Change Boarding Station ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- புதிதாக தோன்றும் திரையில்,நீங்கள் ஏற விரும்பும் போர்டிங் ஸ்டேஷனை கிளிக் செய்தது, கன்பார்ம் என்ற ஆப்ஷன் கேட்கப்படும்.
- தொடர்ந்து, நீங்கள் OK கொடுத்ததும், போர்டிங் மாற்றப்பட்டதற்கான மெசேஜ் உங்கள் செல்போனுக்கு வந்துவிடும். அவ்வளவு தான், மிக எளிதார ரயிலின் போர்டிங் ஸ்டேஷனை மாற்றிவிடலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil