IRCTC Premium Tatkal Tickets Rules: ஐஆர்சிடிசி எனப்படும் இந்திய ரயில்வே கேட்டரிங் டூரிசம் மற்றும் கார்ப்பரேஷன், அதன் அதிகாரப்பூர்வ தளமான irctc.co.in -ல் பிரீமியம் தட்கல் டிக்கெட்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.
'பிரீமியம் தட்கல்' கோட்டாவில் டைனமிக் கட்டண விலை நிர்ணயம் உள்ளது, அதாவது அடுத்தடுத்த முன்பதிவுகளுக்கு கட்டணக் கூறு அதிகரிக்கப்படலாம் என்று ஐ.ஆர்.சி.டி.சியின் வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தட்கலை விட, பிரீமியம் தட்கல் (பி.டி) டிக்கெட்டை விலை சற்று அதிகம். முன்பதிவு ரேட்ஸ் மற்றும் அவைளபிள் சீட்டைப் பொறுத்து, டிக்கெட் விலை மாறுபடும். தட்கல் டிக்கெட் கட்டணங்கள் இரண்டாம் வகுப்புக்கான அடிப்படை கட்டணத்தில் 10 சதவீதமும், அனைத்து வகுப்பினருக்கும் அடிப்படை கட்டணத்திலிருந்து 30 சதவீதமும் குறைந்தபட்ச மற்றும் அதிக பட்ச கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
ஐஆர்சிடிசி பிரீமியம் தட்கல் டிக்கெட்டைப் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டியவை
1. 'பிரீமியம் தட்கல்' டிக்கெட் முன்பதிவின் அட்வான்ஸ் முன்பதிவு காலம் தட்கல் டிக்கெட் முன்பதிவு போன்றது தான். ஐ.ஆர்.சி.டி.சி படி, பிரீமியம் தட்கல் முன்பதிவில் ஏசி வகுப்புகளுக்கு காலை 10 மணிக்கும் மற்ற வகுப்புகளுக்கு காலை 11 மணிக்கும் முன்பதிவு தொடங்கும்.
2. இந்த ஒதுக்கீட்டில் ஆர்.ஏ.சி மற்றும் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் அனுமதிக்கப்படாது. பிரீமியம் தட்கல் ஒதுக்கீட்டில் ஏஜெண்டுகள் டிக்கெட் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. ஐ.ஆர்.சி.டி.சியின் வெப் சர்வீஸ் ஏஜெண்டுகள் 'தட்கல் டிக்கெட்' முன்பதிவுகளுக்கு ஒரு நாளைக்கு ஒரு டிரெயினில் ஒரேயொரு டிக்கெட்டை மட்டுமே ஆன்லைனில் பதிவு செய்ய முடியும்.
3. பிரீமியம் தட்கல் டிக்கெட் கோட்டாவில், இ - டிக்கெட்டுகள் (ஆன்லைன்) மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. ஐ-டிக்கெட் (ஆஃப்லைன்) முன்பதிவு இதில் அனுமதிக்கப்படவில்லை.
4. இந்த ஒதுக்கீட்டில் எந்த சலுகையும் கிடைக்காது என்று ஐ.ஆர்.சி.டி.சி தெரிவிக்கிறது. உறுதிப்படுத்தப்பட்ட பிரீமியம் தட்கல் (பி.டி) டிக்கெட்டை ரத்து செய்தால், பணத்தை திரும்பப் பெற முடியாது.
5. ஆன்லைனில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான மற்ற அனைத்து விதிகளும் பிரீமியம் தட்கல் ஒதுக்கீட்டிற்கும் பொருந்தும் என ஐ.ஆர்.சி.டி அறிவித்துள்ளது.