scorecardresearch

IRCTC News: சார்ட் ரெடி ஆனபிறகும் பணம் ரீஃபண்ட் கிடைக்கும்… எப்படி?

IRCTC: ரயில் டிக்கெட் புக் செய்து சார்ட் ரெடியான பிறகும், அந்த டிக்கெட்டை ரத்து செய்து ரீஃபண்ட் தொகையை பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? அதற்கான செயல்முறையை இங்கே காணலாம்

Train
சென்னை ரயில்கள் தாமதம்

இந்தியா முழுவதும் தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ரயிலில் பயணித்து வருகின்றனர். இதில் பயணக் கட்டணம் மிகவும் குறைவு என்பதோடு, உணவு, கழிப்பறை போன்ற வசதிகள் பொதுமக்களுக்கு ஏதுவாக உள்ளன. முன்பு போல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலைமை இல்லை. உட்கார்ந்த இடத்திலே ஸ்மார்ட்போனில் ஐஆர்சிடிசி செயலி அல்லது இணையதளம் வாயிலாக எளிதாக புக் செய்துவிடலாம்.

அத்தகைய பயணத்தில் ரயில்வே துறை கொண்டு வரும் மாற்றங்களை தெரிந்துகொள்வது அவசியம். நீங்கள் டிக்கெட் புக் செய்து, சார்ட் ரெடி ஆனபிறகு, எதேனும் சிக்கலால் பயணத்தை ரத்து செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும். அச்சமயத்தில், பணம் ரீஃபண்ட் கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா. அதனை இச்செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்.

இதுதொடர்பான வீடியோவை ஐஆர்சிடிசி தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதற்கு, நீங்கள் Ticket Deposit Receiptஐ, ஐஆர்சிடிசி தளத்தில் சப்மிட் செய்ய வேண்டும்.

TDRஐ ஆன்லைனில் அப்ளை செய்யும் வழிமுறை

  • முதலில், ஐஆர்சிடிசி இணையதளம் http://www.irctc.co.in க்கு செல்ல வேண்டும்.
  • ஹோம்பேஜில் My Account கிளிக் செய்ய வேண்டும்.
  • அடுத்து தோன்றும், drop down மெனுவில், My transaction கிளிக் செய்யுங்கள்
  • அதிலிருக்கும், File TDR ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
  • தற்போது, டிக்கெட் யார் பெயரில் புக் செய்யப்பட்டுள்ளது போன்ற விவரங்கள் திரையில் தோன்றும்.
  • அடுத்ததாக, உங்கள் PNR நம்பர், ரயில் எண், captcha code டைப் செய்துவிட்டு, இறுதியாக cancellation rules என இருக்கும் பாக்ஸை டிக் செய்ய வேண்டும். பின்னர், சப்மிட் பட்டன் கொடுக்க வேண்டும்.
  • இதையடுத்து, புக்கிங் செய்யும் போது கொடுத்த மொபைல் நம்பருக்கு, ஓடிபி மெசேஜ் வரும்.
  • அந்த 4 டிஜிட் நம்பரை, திரையில் பதிவிட வேண்டும்.
  • ஓடிபியை பதிவிட்ட பிறகு, சப்மிட் கொடுக்க வேண்டும்.
  • PNR தகவல்களை ஒரு முறை சரிபார்த்துவிட்டு, Cancel ticket ஆப்ஷன் கிளிக் செய்ய வேண்டும்.
  • தற்போது, உங்களுக்கு ரீஃபண்ட் செய்யப்படும் தொகை திரையில் தோன்றும்.
  • இதுதொடர்பான தகவல்கள் புக்கிங்கின் போது கொடுத்த நம்பருக்கு மெசேஜ் வாயிலாக அனுப்பப்படும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Irctc rule refund for cancelled ticket after chart preparation