மூத்த குடிமக்களுக்கு லோயர் பெர்த் கிடைக்குமா? ரயில்வே-யின் முக்கிய அறிவிப்பு

லோயர் பெர்த் அல்லது மூத்த குடிமக்கள் ஒதுக்கீட்டு பெர்த் என்பது 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டது, அவர்களுக்கு நிச்சயம் லோயர் பெர்த் கிடைக்கும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது

IRCTC says Senior citizens will get lower berth: இந்திய இரயில்வே ரயில் பயணிகளுக்கு அவ்வப்போது பல சிறந்த வசதிகளை வழங்கி வருகிறது. டிக்கெட் முன்பதிவு செய்யும் போது உறுதிப்படுத்தப்பட்ட லோயர் பெர்த்தை எவ்வாறு பெறுவது என்பதை இப்போது ரயில்வே கூறியுள்ளது.

நீங்கள் ரயிலில் அடிக்கடி பயணம் செய்பவர்கள் என்றால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்திய ரயில்வேயால் ரயில்களில் பயணம் செய்யும் போது மூத்த குடிமக்களுக்கு கீழ் பெர்த் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆனால் டிக்கெட் முன்பதிவின் போது மூத்த குடிமக்களுக்கு கோரிக்கை விடுத்தும் கீழ் பெர்த் கிடைக்காத நேரங்களும் உண்டு. இதனால் அவர்கள் பயணம் செய்ய சிரமப்படுகின்றனர். ஆனால் இப்போது நிச்சயமாக லோயர் பெர்த் கிடைக்கும் என்று இந்திய இரயில்வே தெரிவித்துள்ளது.

மூத்த குடிமக்களுக்கு லோயர் பெர்த் கிடைப்பதில் உள்ள சிக்கல்களைச் சுட்டிகாட்டி பயணி ஒருவர் இந்திய ரயில்வேக்கு கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த கேள்விக்கு IRCTC தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. லோயர் பெர்த் அல்லது மூத்த குடிமக்கள் ஒதுக்கீட்டு பெர்த் என்பது 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டது, 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களுக்கான லோயர் பெர்த்கள், அவர் தனியாக அல்லது இரண்டு பயணிகளுடன் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யும் போது விதிமுறைகளின்படி லோயர் பெர்த் ஒதுக்கப்படுகிறது. இரண்டுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் அல்லது ஒருவர் மூத்த குடிமகன் மற்றும் மற்றவர்கள் மூத்த குடிமக்கள் இல்லை என்றால், சிஸ்டம் அதை கருத்தில் கொள்ளாது என்று IRCTC கூறியுள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு அத்தியாவசியமற்ற பயணங்களைக் குறைக்க இந்திய ரயில்வே கடந்த ஆண்டு மூத்த குடிமக்கள் உட்பட பல வகை மக்களுக்கு சலுகை டிக்கெட்டுகளை நிறுத்தியது என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறோம். தற்போது கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு இறப்பு அபாயம் அதிகம் உள்ள மூத்த குடிமக்களுக்கு அவர்களுக்கான பயணச் சலுகைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது என்றும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Irctc says senior citizens will get lower berth

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com