இன்று முதல் 7 நாட்களுக்கு இரவில் 6 மணி நேரம் டிக்கெட் முன்பதிவு செய்யும் சேவை நிறுத்தப்படுவதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
கொரோனா காரணமாக ரயில் சேவைகளில் செய்யப்பட்ட மாற்றங்களை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர ரயில்வே நிர்வாகம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பயணிகள் முன்பதிவு சேவை இன்று முதல் 7 நாட்களுக்கு இரவில் 6 மணி நேரம் மூடப்படும் என்று ரயில்வே அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
மேலும், பயணிகளின் சேவைகளை சீரமைக்கும் முயற்சியில், புதிய ரயில்களின் எண்கள் மற்றும் பிற தொடர்புடைய தகவல்களுடன் கணினித் தரவை மேம்படுத்தவும், முன்னதாக அமைச்சகம் அறிவித்தபடி, கொரோனாவுக்கு பிந்தைய சேவைகளின் நிலைகளுக்கு படிப்படியாக திரும்பவும் இந்த ஆறு மணி நேரம் பயன்படுத்தப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 14 மற்றும் 15 ஆம் தேதிகளுக்கிடையிலான இடைப்பட்ட இரவு முதல் நவம்பர் 20 மற்றும் 21 நவம்பர் இரவு வரை, இரவு 11.30 மணிக்கு தொடங்கி காலை 5.30 மணி வரை ரயில் முன்பதிவு சேவை மூடப்படும். இந்த 6 மணி நேர காலத்தில், PRS சேவைகளான, டிக்கெட் முன்பதிவு, நடப்பு முன்பதிவு, டிக்கெட்டை ரத்து செய்தல், விசாரணை சேவைகள் போன்றவற்றை அணுக முடியாது.
அதே இந்த இந்த காலகட்டத்தில், இயக்கப்படும் ரயில் சேவைகளைப் பொறுத்தவரை, ரயில்கள் புறப்படுவதற்கான தகவல்களான, நேரம் மற்றும் பயணிகள் பட்டியலை முன்கூட்டியே ரயில்வே பணியாளர்கள் உறுதி செய்வார்கள். அதேநேரம், PRS சேவைகள் தவிர, 139 சேவைகள் உள்ளிட்ட மற்ற அனைத்து விசாரணை சேவைகளும் தடையின்றி தொடரும். என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், ரயில் பயணிகள் சேவைகளை சீரமைக்கும் மற்றும் மேம்படுத்தும் முயற்சியில் அமைச்சகத்திற்கு ஆதரவளிக்குமாறும் ரயில்வே அமைச்சகம் தனது வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil