IRCTC Tatkal booking: Easy way to get confirmed ticket in Tamil: ரயிலில் தட்கல் மூலம் எளிய முறையில் உறுதிப்படுத்தப்பட்ட பயணச்சீட்டு பெறுவது எப்படி என்பதை இங்கே பார்ப்போம்.
மக்கள் கடைசி நிமிட பயணத் திட்டங்களை உருவாக்கி ஐஆர்சிடிசியில் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். இருப்பினும், ஒரே நேரத்தில் நிறைய பேர் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முயற்சிப்பதால், தட்கல் முன்பதிவில் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டைப் பெறுவது கடினமாக உள்ளது. தட்கல் முன்பதிவைப் பொறுத்தவரையில், நீங்கள் எவ்வளவு விரைவாகச் செயல்படுகிறீர்களோ, அவ்வளவு சீக்கிரம் உறுதி செய்யப்பட்ட தட்கல் டிக்கெட்டைப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
இங்கு குறிப்பிட வேண்டியது என்னவென்றால், குளிரூட்டப்பட்ட (ஏசி) பெட்டிகளுக்கான தட்கல் டிக்கெட் முன்பதிவு காலை 10 மணிக்கு தொடங்குகிறது, அதே நேரத்தில் ஏசி அல்லாத பெட்டிகளுக்கான முன்பதிவு காலை 11 மணிக்கு தொடங்குகிறது.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள அணுகுமுறையை நீங்கள் பின்பற்றினால், தட்கல் முன்பதிவில் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இதையும் படியுங்கள்: ரயிலில் ஒரே மாதத்தில் 12 டிக்கெட் வரை புக் பண்ணும் வசதி; இதை மட்டும் உடனே செய்யுங்க!
IRCTC இன் டிக்கெட் முன்பதிவு தளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, விரிவான படிவங்களையும் (பயணிகளின் விவரங்கள்) கேப்ட்சாவையும் நிரப்ப அதிக நேரம் எடுக்கும். நீங்கள் அனைத்து விவரங்களையும் நிரப்பும் நேரத்தில், அனைத்து தட்கல் டிக்கெட்டுகளும் விற்கப்பட்டு, நீங்கள் காத்திருப்போர் பட்டியலில் இருக்க நேரிடலாம்.
ஐஆர்டிசிடிசி இணையதளத்தில் உள்ள சிறப்பு அம்சத்தைப் பயன்படுத்துவதன் மூலம், அதாவது அனைத்து பயணிகளின் விவரங்களையும் முன்னரே நீங்கள் சேமித்து வைப்பதன் மூலம் விவரங்களை நிரப்புவதற்கான நேரத்தை கணிசமாகக் குறைக்கலாம்.
இதற்கு IRCTC இல் உள்நுழைந்ததும், உங்களது மற்றும் உங்களுடன் பயணம் செய்யும் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களைச் சேமித்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யும்போது, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நீங்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போதெல்லாம், விரிவான படிவத்தை நிரப்புவதற்கு நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை.
அடுத்ததாக தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி இயங்குதளத்தில் உள்நுழையும்போது, புதிய விவரங்களை நிரப்பு என்பதைக் கிளிக் செய்வதற்குப் பதிலாக, ஏற்கனவே உள்ளதைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும். ஏற்கனவே உள்ள விவரங்களைக் கிளிக் செய்வதன் மூலம், அனைத்து பயணிகளின் விவரங்களும் தானாக நிரப்பப்படும், பின்னர் முகவரியையும் கட்டண முறையையும் கிளிக் செய்யவும்.
கட்டண முறையை அடைந்த பிறகு, கிரெடிட் கார்டு, யுபிஐ அல்லது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம். இங்கு குறிப்பிட வேண்டியது என்னவென்றால், UPI தான் வேகமான கட்டண முறை. எனவே தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது UPI ஐப் பயன்படுத்தவும். இந்தச் செயல்பாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட தட்கல் டிக்கெட்டைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.